வைரலாகும் வீடியோவில் சக பயணியாக இருக்கும் ஒரு கலைஞர், தனது ஓவியத் தாளை எடுத்து அங்கிருக்கும் ஒரு பெண் பேருந்து நடத்துனரை வரையத் தொடங்குகிறார். ஓடும் பேருந்தின் குலுக்கல்களுக்கு இடையே இவ்வளவு தத்ரூபமாக ஒரு ஓவியத்தை எப்படி வரைய முடியும் என்ற வியப்பு நம்மிடம் எழுகிறது. அந்தச் சமயத்தில், கர்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழக (KSRTC) பெண் நடத்துனர், தன் மீது ஒருவர் ஓவியம் வரைவதை அறியாமல் தனது வேலையில் மிகவும் மும்முரமாக இருக்கிறார்.
View this post on Instagram
ஓவியம் முழுமையாக முடிந்த பிறகு, அதனை அந்தப் பெண் நடத்துனரிடம் கலைஞர் பரிசாக வழங்குகிறார். எதிர்பாராத அந்தத் தருணத்தில் நடத்துனர் அடைந்த மகிழ்ச்சி, அந்த ஓவியத்தை விடவும் அழகாக இருக்கிறது. மிகுந்த நெகிழ்ச்சியோடு எழுந்து நின்ற அவர், பேருந்தில் இருந்த அனைத்துப் பயணிகளிடமும் அந்த ஓவியத்தைக் காட்டி மகிழ்கிறார். கேமராவுக்கு முன்னால் அமர்ந்து போஸ் கொடுக்காமல், தனது பணியைச் செய்து கொண்டிருந்த ஒரு சாதாரண உழைப்பாளியின் முகத்தில் இக்கலைஞர் கொண்டு வந்த புன்னகை, இந்தத் தருணத்தை உண்மையிலேயே சிறப்பானதாக மாற்றியுள்ளது.
