என்னை ஏன் இன்னும் தூக்கிலிடவில்லை..? பிரதமரிடம் நான்கு கேள்விகளைக் கேட்டதுதான் நான் செய்த குற்றம்… நாட்டுப்புறப் பாடகி நேஹா சிங் ரத்தோர் ஆவேசம்..!!

By Soundarya on தை 5, 2026

Spread the love
நாட்டுப்புறப் பாடகி நேஹா சிங் ரத்தோர், 2025-ஆம் ஆண்டு நடைபெற்ற பஹல்காம் தாக்குதல் குறித்து சமூக வலைதளங்களில் சர்ச்சை கருத்துகளைப் பதிவிட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில், கடந்த ஜனவரி 3-ஆம் தேதி லக்னோவில் உள்ள ஹஸ்ரத்கஞ்ச் காவல் நிலையத்தில் நேரில் முன்னிலை ஆகித் தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்தார். முன்னதாக, உடல்நலக் குறைவு காரணமாகத் தான் முன்னிலை ஆக தாமதமானதாகத் தெரிவித்த அவர், காவல்துறை அனுப்பிய இரண்டாவது நோட்டீஸுக்குப் பிறகுத் தனது கணவருடன் அங்குச் சென்றிருந்தார். சுமார் நான்கு மணி நேரம் நடைபெற்ற இந்த விசாரணைக்குப் பிறகு, முதல்முறையாகத் தான் ஒரு காவல் நிலையத்திற்குள் சென்ற அனுபவம் மிகவும் விசித்திரமாக இருந்ததாக அவர் சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். 
விசாரணைக்குப் பின் வெளியிட்ட வீடியோவில், நாட்டில் வறுமை, வேலையின்மை மற்றும் ஊழல் போன்றப் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டிய அரசாங்கம், தன்னுடன் போராடுவதாக நேஹா சிங் ரத்தோர் குற்றம் சாட்டியுள்ளார். “நான் எந்தத் திருட்டும் செய்யவில்லை, யாரிடமும் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெறவில்லை, மக்களின் வாக்குகளைத் திருடவில்லை.

<

/div>

பிரதமரை விமர்சித்ததற்காக மட்டுமே எனக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது” என  ஆவேசமாகத் தெரிவித்தார். மேலும், தனது மகள் இது போன்ற சூழலில் வாழ்வதைத் தான் ஒரு அவமானமாக கருதுவதாகவும், ஜனநாயக ரீதியான விமர்சனங்களுக்காகத் தன்னை ஏன் இன்னும் தூக்கிலிடவில்லை என்றும் அவர் அந்த வீடியோவில் கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டின் பிரதமரிடம் நான்கு கேள்விகளைக் கேட்டதுதான் நான் செய்த ஒரே குற்றம்; ஒரு சுதந்திரமான ஜனநாயக நாட்டின் குடிமகளாக பிரதமரை விமர்சித்ததை அரசாங்கத்தால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை” என்று நாட்டுப்புறப் பாடகி நேஹா சிங் ரத்தோர் தெரிவித்துள்ளார். தனது நிலையைத் தனக்கு நினைவூட்டுவதற்காகவே நோட்டீஸ் அனுப்பி, தன்னை அரசாங்கம் காவல் நிலையத்திற்கு வரவழைத்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.