திரையுலகின் மூத்த இயக்குநர் பாரதிராஜா, கடுமையான நுரையீரல் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) வைத்து மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும், விரைவில் குணமடைவார் எனவும் மருத்துவமனை நிர்வாகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அவரது உடல்நிலையை மருத்துவக் குழுவினர் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். இச்செய்தி வெளியானதைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் திரையுலகினரும் ரசிகர்களும் அவர் விரைவில் குணமடைய வேண்டிப் பிரார்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர்
