கோபியையும் சுதாகரையும் பிரிக்க ஆள் வந்தாச்சு…. கோலாகலமாக நடந்த ‘பரிதாபங்கள்’ கோபியின் திருமணம்…. வைரலாகும் புகைப்படங்கள்….

By Begam

Updated on:

சமூக வலைத்தளங்களில் முன்னணி யூடுபர்களாக வலம் வருபவர்கள் ‘பரிதாபங்கள் கோபி, சுதாகர்’. ரசிகர்கள் இவர்களை ‘கோசு’ என்று சுருக்கமாக அழைப்பார்கள். இவர்கள் பரிதாபங்கள் என்ற youtube சேனலை தொடங்கி அதில் பல்வேறு ட்ரோல் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

   

ட்ரெண்டிங் நிகழ்வுகளை டாபிக்காக எடுத்துக் கொண்டு அதை ட்ரோல் செய்து வீடியோக்கள் ஆக உருவாக்கி அதனை வெளியிடுவார்கள். இந்த வீடியோக்கள் இணையத்தில் பயங்கர வைரலாக பகிரப்படுகின்றன. கல்லூரி படிப்பில் இருந்து நெருங்கிய நண்பர்களாக இருக்கும் கோபி மற்றும் சுதாகர் வெள்ளித்திரையிலும் ஜோடியாக காமெடியில் கலக்கி வருகிறார்கள்.

ஹிப் ஹாப் தமிழா ஆதியின் படம், ஜாம்பி போன்ற  திரைப்படங்களில் இவர்களின் காமெடி கூட்டணி வெற்றியடைந்தது. சில மாதங்களுக்கு முன்பு பரிதாபங்கள் சுதாகருக்கு திருமணம் முடிந்தது. ஜூன் 9 அன்று கோபிக்கு ‘யமுனா’ என்ற பெண்ணுடன் நிச்சயம் முடிந்த நிலையில், தற்போது திருமணம் நடந்து  முடித்துள்ளது.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது.