சைப்ரஸ் அதிபரின் நிழலாக இருந்தவருக்கே ‘ஆப்பு’!… நள்ளிரவில் நடந்த வேட்டை… மொசாட் ஏஜென்ட்களின் அதிரடி ‘ஸ்டிங் ஆபரேஷன்’…. ஸ்தம்பித்த ஐரோப்பா…!!!

By Muthu Mani on சித்திரை 15, 2026

Spread the love

ஐரோப்பிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையே அமைந்துள்ள சிறிய நாடான சைப்ரஸில், இஸ்ரேலின் தனியார் உளவு நிறுவனமான ‘பிளாக் கியூப்’ (Black Cube) நடத்திய அதிரடி ‘ஸ்டிங் ஆபரேஷன்’ சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சைப்ரஸ் அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடுலைடிஸின் மூத்த உதவியாளர் ஒருவர், அரசுத் திட்டங்களில் முதலீடு செய்வது மற்றும் அதிபரைச் சந்திப்பது தொடர்பாக ரகசியப் பேச்சுகளில் ஈடுபட்ட 8 நிமிட வீடியோ இணையத்தில் கசிந்தது. இந்த வீடியோ ஆதாரத்தால் அந்த உயர் அதிகாரி கடந்த ஜனவரி மாதம் தனது பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டது, இது அந்நாட்டு அரசையே அதிரவைத்துள்ளது.

இந்த அதிரடி நடவடிக்கைக்குப் பின்னால் இருப்பது இஸ்ரேலின் புகழ்பெற்ற ‘மொசாட்’ அமைப்பின் முன்னாள் அதிகாரிகளால் தொடங்கப்பட்ட ‘பிளாக் கியூப்’ நிறுவனம் ஆகும். சைப்ரஸில் நிலவும் ஊழலை அம்பலப்படுத்துவதற்காகவே இந்த ரகசிய ஆய்வை மேற்கொண்டதாக அந்த நிறுவனம் பெருமையுடன் ஒப்புக்கொண்டுள்ளது. இருப்பினும், ஒரு நாட்டின் உயர்மட்ட அதிகாரிகளுக்கே “ஆப்பு” வைத்த இந்த ஆபரேஷனைச் செய்ய பிளாக் கியூப் நிறுவனத்திற்குப் பணம் கொடுத்துப் பணியமர்த்தியது யார் என்பது இன்னும் மர்மமாகவே நீடிக்கிறது.

   

உளவுத்துறையில் உலகிற்கே சிம்மசொப்பனமாக விளங்கும் இஸ்ரேலின் மொசாட் (Mossad) அமைப்பின் பாணியிலேயே இந்த தனியார் நிறுவனமும் செயல்படுகிறது. இஸ்ரேலைச் சுற்றி எப்போதும் எதிரி நாடுகள் சூழ்ந்திருப்பதால், அந்நாட்டின் பாதுகாப்பு அரணாக மொசாட் திகழ்கிறது. “எதிரிகள் உலகின் எந்த மூலையில் ஒளிந்திருந்தாலும், அவர்கள் வீட்டு வரவேற்பறைக்கே சென்று தண்டிப்பார்கள்” என்பதே மொசாட்டின் உலகளாவிய இமேஜ் ஆகும். அந்தத் துல்லியமும், வேகமும் தான் தற்போது பிளாக் கியூப் போன்ற தனியார் நிறுவனங்களின் செயல்பாடுகளிலும் எதிரொலிக்கிறது.

   

மொசாட்டின் வரலாற்றில் மறக்க முடியாத பல அதிரடி ஆபரேஷன்கள் உள்ளன. அர்ஜெண்டினாவில் பதுங்கியிருந்த நாஜி குற்றவாளி அடோல்ஃப் ஐக்மனை கடத்தி வந்து தூக்கிலிட்ட ‘ஆபரேஷன் பினாலே’, உகாண்டாவில் பிணைக்கைதிகளை மீட்ட ‘ஆபரேஷன் என்டேபே’ மற்றும் மியூனிக் ஒலிம்பிக் படுகொலைக்குக் காரணமானவர்களைத் தேடித் தேடி அழித்த ‘வ்ராத் ஆஃப் காட்’ (Wrath of God) போன்றவை உலகையே வியக்க வைத்தவை. இத்தகைய உளவுத்துறை மேலாதிக்கமே இஸ்ரேலை ஒரு சிறிய நாடாக இருந்தாலும் உலக அரங்கில் வலிமையான சக்தியாக நிலைநிறுத்தியுள்ளது.