ஓட்காவுடன் நாவல் பழ ‘கோலா ஐஸ்’.. சண்டிகரில் செம்ம பிளான் போட்ட மதுக்கடை ஓனர்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்.. வைரல் வீடியோ

Spread the love

சண்டிகரின் ஆடம்பரமான மற்றும் முக்கியப் பிரமுகர்கள் அடிக்கடி வந்து செல்லும் செக்டர்-9 சந்தையில் உள்ள ‘லிகர் வேர்ல்ட்’ என்ற மதுபானக் கடைக்கு வெளியே, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஓட்கா பிராண்ட் ஒன்றை விளம்பரப்படுத்தும் விதமாகப் பொதுமக்களுக்குப் பகிரங்கமாக இலவசமாக மதுபானம் வழங்கப்பட்டுள்ளது. ‘ஸ்மிர்னாஃப் மின்டி ஜாமூன்’ சுவையுடைய ஓட்கா, ஐஸ் ரோல்களில் (பராஃப் கா கோலா) கலக்கப்பட்டு மக்களுக்கு வெளிப்படையாகப் பரிமாறப்பட்ட இந்தக் காணொளி சமூக ஊடகங்களில் காட்டுத்தீயாகப் பரவி வைரலானது. இந்த விளம்பர நடவடிக்கையைக் கண்டு அங்கு ஒரு பெரிய கூட்டமே கூடியது காணொளியில் வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்து, இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி சட்ட நடவடிக்கையைத் தூண்டியுள்ளது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து செக்டர்-3 போலீசார் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்து, கடை உரிமையாளரான ராஜேஷ் சச்தேவாவை அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இந்த விளம்பரப் பணியில் ஒரு தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தப் பணியாளர் ஈடுபட்டிருந்ததாகக் காவல் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தில் வேறு யார் யாருக்குத் தொடர்புள்ளது என்பது குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வரும் வேளையில், சம்பந்தப்பட்ட முக்கிய மதுபான ஒப்பந்ததாரர் மீது இதுவரை ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற கேள்விகளும் வலுத்து வருகின்றன.

Muthu Mani

Recent Posts

TN உள்ளாட்சி தேர்தலுக்குள் இறங்கிய இளைஞர் காங்கிரஸ்… வைரலாகும் ‘மக்கள் சேவகன்’ பிளான்…!!

தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…

5 மணத்தியாலங்கள் ago

“என் முதல் ஹீரோ நீங்கதான் அப்பா…!” – தந்தையர் தினத்தில் ரோபோ சங்கர் மகள் உருகிய உருக்கமான பதிவு…!!

தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…

5 மணத்தியாலங்கள் ago

லக்னோவில் கோர விபத்து… மின்சார கேபிள் ஒயர்களைப் பிடித்து… உயிர் தப்பிய மாணவர்கள்… நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி வீடியோ…!

லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…

5 மணத்தியாலங்கள் ago

“என்னது.. இந்த வயசுல இப்படியா…?! யார் இந்த ‘மினி ரொனால்டோ’…? – உலக கால்பந்து ஜாம்பவான்களையே திரும்பிப் பார்க்க வைத்த… அந்த ஒரு நிமிட வீடியோ…!”

சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…

5 மணத்தியாலங்கள் ago

“”ஷேர் மார்க்கெட் பயம் இருக்கா..? கவலைய விடுங்க… முதலீடு ஒரு முறை… ஒவ்வொரு மாதமும் ₹9,250… மத்திய அரசின் அதிரடி உத்தரவு…!!”

இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…

6 மணத்தியாலங்கள் ago

“உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முதல் மாடியிலிருந்து குதித்த கொடூரம்…” – லக்னோ தீ விபத்தில்… 15 பேர் பலியான பதறவைக்கும் பின்னணி… பிரதமர் மோடி அதிர்ச்சி இரங்கல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…

6 மணத்தியாலங்கள் ago