Categories: சினிமா

எம்ஜிஆரை ஏமாற்ற நினைத்த பெண்… விஷயமறிந்து புரட்சி தலைவர் செய்த காரியம்…

Spread the love

எம்ஜிஆர் தமிழ் சினிமாவில் பணியாற்றிய முன்னணி நடிகர் மற்றும் புகழ் பெற்ற நடிகர் ஆவார். மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் எம்ஜிஆர். அரசியலிலும் சரி சினிமாவிலும் சரி தனகென தனிப்பாதை வகுத்து சிம்மாசனம் அமைத்து அமர்ந்திருந்தவர் எம்ஜிஆர்.

குடும்ப வறுமைக்காக நாடகங்கள் அளிக்க ஆரம்பித்த எம்ஜிஆர் பின்னால் நடிகராக உயர்ந்தார். எம்ஜிஆர் படங்கள் என்றாலே திராவிட சிந்தனைகள் சமூக நீதி கருத்துக்கள் ஆக்சன் காட்சிகள் நிறைந்திருக்கும். அதனால் மக்கள் இவரை வெகுவாக ரசித்தனர். இவரின் படங்கள் வெளிவந்தாலே கெத்து தான் என்ற அளவுக்கு புகழின் உச்சியில் இருந்தார்.

தன்னை ஆதரித்த தமிழக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று விரும்பிய எம்ஜிஆர் அரசியலில் களமிறங்கி தேர்தலில் போட்டியிட்டு தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக தான் இறக்கும் வரையிலும் சிறப்பாக ஆட்சி நடத்தினார் எம்ஜிஆர். எம்ஜிஆர் நல்ல குணம் படைத்த மனிதர் வாரி வழங்கும் வள்ளல். தன்னை நாடி கஷ்டம் என வருபவருக்கு இல்லை என்று சொல்லாமல் கொடுப்பவர். அப்படி ஒரு நாள் ஒரு பெண்மணி எம்ஜிஆரை ஏமாற்ற நினைத்திருக்கிறார்.

அது என்னவென்றால் எம்ஜிஆர்-யை தேடி மிகவும் கஷ்டத்தில் இருப்பவர்கள் உதவி வேண்டுபவர்கள் நேராக எம்ஜிஆர் அவர்களின் ராமாபுரம் வீட்டுக்கே சென்றுவிடுவர். அதனால் எம்ஜிஆர் வீட்டு முன்பு ஒரு பெரிய கூட்டம் தினமும் இருக்கும். அவர்களது கஷ்டத்தை கேட்டு தீர்த்து விடுவார் எம்ஜிஆர். அப்படி ஒரு நாள் ஒரு வசதியான பெண்மணி எம்ஜிஆர் வீட்டு முன்னால் வந்து அவர் போட்டிருந்த நகைகள் எல்லாம் மறைவில் போய் கழட்டி வைத்துவிட்டு வரிசையில் நின்று கஷ்டப்பட்டவர் போல் எம் ஜி ஆர் இடம் இட்லி கடை வைத்து பிழைப்பு நடத்துகிறேன் எனக்கு ஒரு கிரைண்டர் வேணும் என்று கேட்டிருக்கிறார்.

உடனே எம் ஜி ஆர் அவர்களும் பணத்தை உதவியாளிடம் சொல்லிக் கொடுத்து அனுப்பினார். அந்தப் பெண்மணியும் வாங்கிவிட்டு வெளியே வரும்போது வீட்டின் வாட்ச்மேன் அவரை தடுத்து நிறுத்தி நீ நகையை கழட்டினத்தை நான் பாத்துட்டேன் ஐயா கிட்டையே நான் சொல்லிட்டேன் இருந்தாலும் நம்ம வீடு தேடி வந்தவங்களுக்கு கொடுத்து அனுப்பனும் என்று தான் ஐயா கொடுத்திருக்கிறார் அதனால இனிமேல் இப்படி பண்ற வேலைய வச்சுகாதே என்று திட்டி அனுப்பி இருக்கிறார். அப்படி தன்னை நாடி வந்தவர்க்கு எல்லாம் கை சிவக்க அள்ளிக் கொடுத்தவர் எம்ஜிஆர்.

admin

Recent Posts

“73 நாள் எச்சரிக்கை… பலித்த ஜோதிடம்”… கோட்டைப் பக்கமே வராதீங்க…. ஜோதிடருக்கு ரெட் கார்டு கொடுத்த விஜய்?…. பின்னணியில் வெளியான பரபரப்பு உண்மை..!

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதல்வருமான விஜய் மற்றும் அவரது ஆஸ்தான ஜோதிடராக அறியப்படும் ராதன் பண்டிட் ஆகியோருக்கு இடையேயான…

2 minutes ago

திடீர் திருப்பம்…. சலசலப்புக்கு நடுவே எடப்பாடியை ‘அண்ணன்’ என அழைத்த எஸ்பி வேலுமணி…. ஒற்றை வார்த்தையால் உறைந்துபோன பேரவை….!

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்று வரும் துறை சார்ந்த மானியக் கோரிக்கை விவாதத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டு…

13 minutes ago

சட்டமன்றத்தில் விஜய் போட்ட ‘பாம்’…. பரந்தூர் திட்டம் திடீர் ரத்து…. பின்னணியில் அமித்ஷா போட்ட கணக்கு?…. வெளியான சீக்ரெட் பிளான்…!

பரந்தூர் சர்வதேச விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்தில் அறிவித்திருப்பது, தமிழக அரசியல் மற்றும் பொருளாதாரக் தளங்களில்…

30 minutes ago

“என்கிட்ட ஆதாரம் இருக்கு…. நாங்களே லஞ்சம் கொடுத்தோம்”….. சட்டப்பேரவையில் அமைச்சர் மரியவில்சன் அளித்த பரபரப்பு வாக்குமூலம்..!

கடந்த ஆட்சிக்காலத்தில் தனியார் மற்றும் சிறுபான்மையினப் பள்ளிகளுக்கு அனுமதி வழங்குவதற்காகக் கட்டாயப்படுத்திப் பணம் வசூலிக்கப்பட்டதாக நிதியமைச்சர் மரியவில்சன் சட்டப்பேரவையில் புயலைக்…

40 minutes ago

“தூக்கத்தில் விழுந்த அடி”…. TVK அரசுக்கு வந்த முதல் ஆபத்து…. 100 ஏக்கர் நிலப்பரப்பு ரகசியம் அம்பலம்…..!

ஊழலற்ற, வெளிப்படையான நிர்வாகத்தை வழங்குவோம் என்ற முதன்மை முழக்கத்துடன் அதிகாரத்தைக் கைப்பற்றிய தமிழக வெற்றிக் கழக அரசுக்கு, ஆட்சிப் பொறுப்பேற்ற…

50 minutes ago