புதுச்சேரி அரசியலில் இன்று காலை முதலே அடுத்தடுத்த அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. தொகுதிப் பங்கீடு மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் மேலிட அழுத்தம் காரணமாக, தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து (NDA) முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ் வெளியேற முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் கசிந்தன.
இந்த அரசியல் பரபரப்பு தணியும் முன்னரே, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக), என்.ஆர். காங்கிரஸுடன் கூட்டணி அமைப்பதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி ஒட்டுமொத்த அரசியல் களத்தையும் அதிரவைத்துள்ளது. ரங்கசாமியின் இந்தத் திடீர் வியூகத்தால் புதுச்சேரி பாஜகவினர் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ள நிலையில், தவெக – என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி உறுதியானால் அது மாநிலத்தின் தேர்தல் முடிவுகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
