தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பல்வேறு கட்சிகளிலிருந்து நிர்வாகிகள் விலகி மாற்று கட்சிகளில் இணைவது அதிகரித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, சேலம் மாவட்டத்தில் மதிமுகவிற்குப் பலத்த பின்னடைவு ஏற்படும் வகையில், அக்கட்சியின் மத்திய மாவட்டச் செயலாளர் சங்கேஷ்வரன் மற்றும் மாநகரச் செயலாளர் அருள்மாது ஆகியோர் தங்கள் ஆதரவாளர்களுடன் விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ளனர்.
இவர்களுடன் மாவட்ட பிரதிநிதிகள் ரஜினிகாந்த், நாகேந்திரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் அக்கட்சியில் இணைந்ததையடுத்து, அவர்களுக்கு தவெக தரப்பில் அருண்ராஜ் சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தார். தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்த திடீர் கட்சித் தாவல் சேலம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
