வெயிலில் சென்றாலே தோல் எரியும் ஒரு விசித்திரமான மற்றும் கொடுமையான பாதிப்பிற்கு ஒரு பெண் ஆளாகியுள்ளார். ஆரம்பத்தில், அவரது தோலில் ஏற்பட்ட கடுமையான எரிச்சல் மற்றும் கொப்புளங்களைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் மருத்துவரை அணுகியபோது, அவை சாதாரணக் காயங்கள்தான் என்று கூறி அலட்சியமாகத் தள்ளப்பட்டார்.
ஆனால், நாட்களாகியும் ஆறாத அந்த ரணங்களும், சூரிய ஒளி பட்டால் ஏற்படும் தாங்க முடியாத வலியும் அவரை நிலைகுலையச் செய்தன. சாதாரண வெயில் இவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்துமா என்ற அச்சத்தில் இருந்த அவருக்கு, நீண்ட தேடலுக்குப் பிறகே அந்தப் பயங்கரமான உண்மை தெரியவந்தது.
மேலும் முறையான மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு, அந்தப் பெண்ணிற்கு எனப்படும் மிக அரிய வகை மரபணு நோய் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த நோய் பாதிப்பு உள்ளவர்களுக்குச் சூரிய ஒளியில் உள்ள புறஊதாக் கதிர்கள் பட்டால், தோலில் உள்ள செல்கள் சிதைந்து கடுமையான தீக்காயங்கள் போன்ற புண்கள் ஏற்படும்.
இந்நிலையில் “வாம்பயர் நோய்” என்று அழைக்கப்படும் இந்த நிலை, மிகச் சாதாரணமான ஒரு செயலைக் கூட அந்தப் பெண்ணிற்கு மரண வலியாக மாற்றியுள்ளது. மருத்துவர்கள் சாதாரணமாகக் கருதிய விஷயம், ஒரு பெண்ணின் வாழ்நாள் முழுவதும் தொடரக்கூடிய போராட்டமாக மாறியுள்ளது ஒட்டுமொத்தப் பகுதியையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
