குளியலறையில் இருந்த சென்னை தம்பதி… ரகசியமாக எட்டிப்பார்த்த ஹோட்டல் ஊழியர்… ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க ஹோட்டல் நிர்வாகத்திற்கு நீதிமன்றம் உத்தரவு…!!

By Soundarya on தை 10, 2026

Spread the love

சென்னையைச் சேர்ந்த பெண் வழக்கறிஞரும் அவரது கணவரும் ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் உள்ள ‘தி லீலா பேலஸ்’ (The Leela Palace) என்ற நட்சத்திர விடுதியில் தங்கியிருந்தபோது நேர்ந்த கசப்பான அனுபவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாளொன்றுக்கு 55,000 ரூபாய் வாடகை செலுத்தி அந்த அறையில் தங்கியிருந்தபோது, தம்பதியர் இருவரும் குளியலறையில் இருந்த சமயம் விடுதி ஊழியர் ஒருவர் மாற்றுச் சாவியைப் பயன்படுத்தி அத்துமீறி அறைக்குள் நுழைந்துள்ளார்.

அறைக்குள் வரவேண்டாம் என அவர்கள் சத்தமிட்டும் பொருட்படுத்தாத அந்த ஊழியர், குளியலறையின் துவாரம் வழியாக எட்டிப் பார்த்ததாகக் கூறப்படுகிறது. தங்களின் தனியுரிமை (Privacy) மீறப்பட்டதால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த தம்பதியினர், நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், விடுதி நிர்வாகத்தின் அலட்சியத்தை வன்மையாகக் கண்டித்ததுடன், விடுதியின் உரிமையாளரான ‘Schloss Udaipur Private Limited’ நிறுவனம் பாதிக்கப்பட்ட தம்பதியருக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.