இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்று ஜனவரி 10 ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் தான் பராசக்தி. பல போராட்டங்களுக்கு பின் நேற்று சென்சார் சான்றிதழ் அளிக்கப்பட்ட நிலையில் இன்று ரிலீஸ் ஆனது. இந்நிலையில் பின்னணிப் பாடகி கெனிஷா, ‘பராசக்தி’ திரைப்படம் குறித்து தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். இந்தப் படத்தில் ரவி மோகன் ஹீரோவாக நடித்தால் என்ன? அல்லது வில்லனாக நடித்தால் என்ன?, அவர் ஒருவருக்காகவே இந்தப் படம் ஓடும் என அவர் பாராட்டியுள்ளார்.
திரையில் ரவி மோகனை தவிர தனது கண்ணுக்கு வேறு யாரும் தெரியவில்லை என்றும், இந்தப் படம் அவருக்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது போலத் தெரிவதாகவும் கெனிஷா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். ரவி மோகனின் நடிப்புத் திறமையை மையப்படுத்தியே ‘பராசக்தி’ திரைப்படம் வெற்றிகரமாக அமையும் என அவர் தனது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.
