“என் பொண்டாட்டியை காணோம்” வயலில் எலும்புக்கூடாகக் கிடந்த இளம்பெண் சடலம்… ஒரு புடவையால் வெளிவந்த அதிர்ச்சி உண்மை…!!

By Soundarya on தை 10, 2026

Spread the love

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள கடுகு வயல் ஒன்றில், நேற்று காலை எலும்புக்கூடு ஒன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த எலும்புக்கூடு முற்றிலும் சிதைந்த நிலையில் இருந்ததால், அது யாருடையது என்பதைக் கண்டறிவதில் காவல்துறையினருக்குத் தொடக்கத்தில் பெரும் சவாலாக இருந்தது.

இருப்பினும், எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்ட இடத்தில் இருந்த ஒரு புடவையை வைத்து, அது அதே பகுதியைச் சேர்ந்த பீதாம்பர் என்பவரின் மனைவி பூனம் (30) என்பது முதற்கட்டமாகத் தெரியவந்தது. கடந்த 2025 டிசம்பர் 13-ம் தேதி கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறிற்குப் பிறகு, பூனம் காணாமல் போனதாகப் பீதாம்பர் ஏற்கனவே காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தார். தற்போது கிடைத்துள்ள உடல் பூனத்தினுடையது தானா என்பதை உறுதிப்படுத்த, அதன் பாகங்கள் டிஎன்ஏ (DNA) பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பாகப் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.