மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் உள்ள எடப்பாடி பழனிசாமி, திமுக தரப்பில் இன்னும் தொகுதிப் பங்கீடே முடிவடையாத நிலையில், அதிமுகவின் முதற்கட்ட மற்றும் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு அதிரடி காட்டியுள்ளார். பாஜக, பாமக, தமாகா, அமமுக உள்ளிட்ட 14 கட்சிகளுடன் மெகா கூட்டணியை உறுதி செய்துள்ள அவர், தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் நீடித்த இழுபறிகளை ஒரே நாளில் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளார். இதன் மூலம் தேர்தல் பணிகளில் திமுகவை விட ஒருபடி முன்னேறிச் சென்றுள்ளதாக அதிமுகவினர் உற்சாகமடைந்துள்ளனர்.
இருப்பினும், எடப்பாடி பழனிசாமியின் இந்தத் தொகுதி ஒதுக்கீடு குறித்த விமர்சனங்களும் ஒருபுறம் எழுந்துள்ளன. குறிப்பாக, திமுகவின் மூத்த அமைச்சர்கள் போட்டியிடும் பல முக்கியத் தொகுதிகளில் அதிமுகவின் ‘இரட்டை இலை’ சின்னத்தை நேரடியாகக் களமிறக்காமல், கூட்டணி கட்சிகளுக்கு அந்தத் தொகுதிகளை அவர் ஒதுக்கியுள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள், அமைச்சர்களுக்கு எதிராக எப்போதும் வலுவான அதிமுக வேட்பாளர்களையே நிறுத்துவார்; ஆனால் இம்முறை அந்த மரபு மாற்றப்பட்டு, அமைச்சர்களுக்கு எதிராகத் தாமரை, மாம்பழம், குக்கர் போன்ற சின்னங்கள் களம் காண்கின்றன.
உதாரணமாக, சைதாப்பேட்டையில் அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு எதிராக அமமுகவும், திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ.வேலுக்கு எதிராக பாஜகவும் போட்டியிடுகின்றன. அதேபோல் சேலம் வடக்கு, ராணிப்பேட்டை, திருச்சி மேற்கு, ஈரோடு மேற்கு எனப் பல அமைச்சர்களின் தொகுதிகளில் அதிமுக நேரடியாகப் போட்டியிடவில்லை. வலுவான அமைச்சர்களைச் சொந்தத் தொகுதியிலேயே முடக்கி வைக்க அதிமுகவின் நேரடிப் போட்டி அவசியம் என அரசியல் நிபுணர்கள் கருதிய சூழலில், எடப்பாடியின் இந்த முடிவு அமைச்சர்களுக்குச் சாதகமாக அமைந்துவிடுமோ என்ற அச்சம் அதிமுக தொண்டர்களிடையே எழுந்துள்ளது.
அதிமுக நேரடியாகப் போட்டியிட்டால் அமைச்சர்கள் தங்கள் தொகுதியைத் தாண்டி வெளியே வர முடியாது; ஆனால் இப்போது கூட்டணி கட்சிகள் போட்டியிடுவதால் அமைச்சர்கள் தப்பித்துவிடுவார்கள் என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. அதே சமயம், இது ஒரு புதிய அரசியல் வியூகம் என்றும், குறிப்பிட்ட சமூக வாக்குகள் மற்றும் கூட்டணி கட்சிகளின் பலத்தைக் கொண்டு அமைச்சர்களை வீழ்த்த எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாகவும் மற்றொரு தரப்பினர் கூறுகின்றனர். இந்த ‘மாற்று வியூகம்’ தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தமிழகத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில், அடுத்த 3 மாதங்களுக்குள் புதிதாக 2,000 மின்சார ஏசி பஸ்களை…
சென்னை வியாசர்பாடியில் உள்ள பிரபல நகைக் கடையில் கடந்த நான்கு மாதங்களாக வாடிக்கையாளர் போல பர்தா அணிந்து வந்து, ஊழியர்களின்…
தமிழக அரசியல் வரலாற்றில் நீண்ட காலமாக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகள் மட்டுமே மாறி மாறி ஆட்சி…
ஈரோடு மாவட்டம், சக்தி சாலை செங்குந்தர் நகர் 6-வது வீதியைச் சேர்ந்த 50 வயதுடைய கண்ணன் என்பவர், அங்குள்ள காலண்டர்…
ஹரியானா மாநிலம் குர்கானைச் சேர்ந்த 21 வயது இளைஞரான மோனு, கடந்த ஜூன் 8-ஆம் தேதி இரவு மருந்து வாங்குவதற்காக…
விழுப்புரம் மாவட்டத்தில் சிறுமிகளுக்கு எதிராக அரங்கேறிய அடுத்தடுத்த பாலியல் அத்துமீறல்கள் தொடர்பாக, கடந்த சனிக்கிழமை (ஜூலை 04) ஒரே நாளில்…