“பனி படர்ந்த எரிமலையில் தனிமையில் இராட்சத கரடி…” 7,200 அடி உயரத்தில் ஹெலிகாப்டர் பைலட்டை மிரள வைத்த காட்சி… வைரலாகும் வீடியோ…!!

By Devi Ramu on ஐப்பசி 26, 2026

Spread the love

அமெரிக்காவின் அலாஸ்கா பகுதியில் உள்ள பனி படர்ந்த பிரம்மாண்ட எரிமலை உச்சியில், சுமார் 7,200 அடி உயரத்தில் இராட்சத கிரிஸ்லி கரடி ஒன்று தனியாகச் சுற்றித்திரியும் அரிய காட்சி ஹெலிகாப்டர் பைலட் ஒருவரால் படம்பிடிக்கப்பட்டுச் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அலிஷியன் மலைத்தொடருக்கு மேலே ஹெலிகாப்டரில் சென்று கொண்டிருந்தபோது, உறைபனி சூழ்ந்த மலையுச்சியில் பழுப்பு நிறப் புள்ளியாக இந்த பிரம்மாண்ட கரடி உலா வருவதை பைலட் கண்டு ஆச்சரியமடைந்துள்ளார்.

https://www.instagram.com/reel/De44G4UhVEc/?utm_source=ig_web_copy_link&psln=MzRlODBiNWFlZA==&srtk=MzRlODBiNWFlZA==

   

சுமார் 360 கிலோவுக்கும் அதிகமான எடையும், மணிக்கு 55 கி.மீ வேகத்தில் ஓடும் திறனும் கொண்ட கிரிஸ்லி கரடிகள் கடும் குளிரையும் கரடுமுரடான நிலப்பரப்புகளையும் தாங்கி வாழக்கூடியவை. குளிர்கால உறக்கத்திற்குப் பிறகு மலையுச்சியில் இருந்து வெளியேறியிருக்கலாம் என வனவிலங்கு நிபுணர்கள் கணித்துள்ள நிலையில், மனித நடமாட்டமே இல்லாத கடுமையான பனிமலையில் இந்த கரடி உலா வரும் வீடியோ நெட்டிசன்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.