தோழி வீட்டிற்கு சென்று வந்த பெண்…. லிப்ட் கொடுப்பதாக கூறி 2 மணி நேரத்திற்கும் மேலாக சீரழித்த கும்பல்…. குலை நடுங்க வைக்கும் பயங்கரம்…!!

Spread the love

டெல்லி அருகே ஃபரிதாபாத்தில் 28 வயது இளம் தாய் ஒருவர், ஓடும் வேனில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகக் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவரைப் பிரிந்து வாழ்ந்து வரும் அந்தப் பெண், தனது தோழி வீட்டிற்குச் சென்றுவிட்டு நள்ளிரவில் வீடு திரும்புவதற்காகப் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்துள்ளார்.

அப்போது அந்த வழியாக வேனில் வந்த இரு இளைஞர்கள், அப்பெண்ணை வீட்டில் இறக்கிவிடுவதாக ஆசை வார்த்தை கூறி வேனில் ஏற்றியுள்ளனர். அவர்களை நம்பி வேனில் ஏறிய அந்தப் பெண்ணைக் கடத்திச் சென்ற கும்பல், ஆள் நடமாட்டமற்ற சாலையில் வைத்து இந்தக் கொடூரத்தைச் செய்துள்ளது.

சுமார் இரண்டு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, அதிகாலையில் அந்தப் பெண்ணைச் சாலையோரம் தூக்கி வீசிவிட்டு அந்தக் கும்பல் தப்பியோடியது. இதில் முகத்தில் பலத்த காயமடைந்த அந்தப் பெண், தற்போது மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், துரிதமாகச் செயல்பட்டு குற்றவாளிகள் இருவரையும் கைது செய்துள்ளனர். மேலும் அவர்கள் பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ள போலீசார், இது தொடர்பாகத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல்நிலை தேறிய பிறகு அவரிடம் வாக்குமூலம் பெறத் திட்டமிடப்பட்டுள்ளது.

Devi Ramu

Recent Posts

“வெறும் 50 ரூபாய் தக்காளி சண்டை” வீடுபுகுந்து கஸ்டமரின் மண்டையை உடைத்த கடைக்காரர்… வெளியான பகீர் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…

9 minutes ago

“அரசு சம்பளத்துல சுகமான தூக்கம்…!” பாட்னா சந்திப்பில் அரங்கேறிய கூத்து… நெட்டிசன்கள் ஆக்ரோஷம்… அலறியடித்து ஓடிவந்த இரயில்வே நிர்வாகம்…!!

பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…

14 minutes ago

முதல்வர் விஜய்யை அன்ஃபாலோ செய்த த்ரிஷா… நடந்தது என்ன…? இணையத்தில் விவாதத்தை கிளப்பும் நெட்டிசென்கள்…!!

சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…

23 minutes ago

‘ஒரு நிமிஷம் லேட்டானாலும் விடமாட்டோம்’ ஊழியர்களின் ரத்தத்தை உறிஞ்சும் கார்ப்பரேட் நிறுவனம்… நெட்டிசன்களை அதிரவைத்த ஆபீஸ் ரூல்ஸ்..!!

சமூக வலைத்தளமான X தளத்தில் அலுவலகம் ஒன்றின் விசித்திரமான அறிவிப்பு ஒன்று வெளியாகி, தற்பொழுது பெரும் வைரலாகி வருகிறது. அந்த…

45 minutes ago

“நெருங்கிய மரணம்… அந்தரத்தில் ஊசலாடிய உயிர்…! சீனாவின் 200 அடி உயரப் பேராபத்தில் நடந்தது என்ன…?”

சீனாவின் நான்செங் நகரில் வானில் பாராகிளைடிங் செய்துகொண்டிருந்த நபர் ஒருவர், திடீரென வீசிய பலத்த காற்றினால் தனது கட்டுப்பாட்டை இழந்தார்.…

56 minutes ago

பதவி விலகும் செல்வபெருந்தகை… திமுக – தவெக கூட்டணியால் காங்கிரஸில் வெடித்ததா பூகம்பம்…?! அதிரடி பின்னணி…!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. செல்வபெருந்தகை, தனது பதவியில் இருந்து விலக விருப்பம் தெரிவித்து அகில இந்திய காங்கிரஸ்…

1 மணத்தியாலம் ago