BREAKING: இந்தியாவிலேயே ஃபர்ஸ்ட் டைம்.. ட்ரோன் ரோந்து.. முதல்வர் விஜய் அதிரடி ..!!

By Muthu Mani on ஆனி 9, 2026

Spread the love

சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் விஜய் ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ திட்டத்தை முறைப்படி தொடங்கி வைத்துள்ளார். இந்நிகழ்வில், அதிரடிப்படை காவலர்களின் கம்பீரமான அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, பிரத்யேக இலச்சினையை அறிமுகம் செய்து திட்டத்தைத் துவக்கி வைத்த முதல்வர் விஜய், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க இந்தியாவிலேயே முதல்முறையாக ட்ரோன் மூலம் இந்தச் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை ரோந்துப் பணி அறிமுகப்படுத்தப்படும் என்ற அதிரடி அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.