Categories: இந்தியா

பகீர் !… “மனைவியின் சடலத்துடன் 2 நாட்கள் குடும்பம் நடத்திய கணவன்!”… பின்னணியில் இருக்கும் திடுக்கிடும் உண்மை… மத்திய பிரதேசத்தை உலுக்கிய கொடூரம்…!!!

Spread the love

மத்திய பிரதேச மாநிலம் கார்கோன் மாவட்டத்தைச் சேர்ந்த 38 வயது ஜெகதீஷ் தாபர், தனது முதல் மனைவி மற்றும் நான்கு குழந்தைகளைப் பிரிந்து, ரீமாபாய் என்ற 25 வயது பெண்ணை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று இரவு உணவின் போது ஏற்பட்ட சிறிய வாக்குவாதம் பெரும் மோதலாக வெடித்ததில், ஆத்திரமடைந்த ஜெகதீஷ் வீட்டில் இருந்த மரக்கட்டையால் ரீமாபாயை சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.

கொலை செய்த பிறகும் எவ்வித பதற்றமும் இன்றி, மனைவியின் உடலை கட்டிலில் கிடத்திவிட்டு அதன் அருகிலேயே ஜெகதீஷ் நிம்மதியாகப் படுத்து உறங்கியுள்ளார். சுமார் இரண்டு நாட்களாக அழுகிய நிலையில் இருந்த பிணத்துடன், தனது இரண்டு குழந்தைகளையும் அதே வீட்டில் வைத்து அவர் குடும்பம் நடத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெளியில் யாருக்கும் தெரியாமல் உடலை வீட்டிற்குள்ளேயே வைத்திருந்த நிலையில், துர்நாற்றம் வீசத் தொடங்கியதால் சந்தேகம் அடைந்த ஜெகதீஷின் தந்தை இதுகுறித்து காவல் துறையினருக்குத் தகவல் அளித்தார்.

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், ரீமாபாயின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, சடலத்துடன் இரண்டு நாட்கள் வாழ்ந்த ஜெகதீஷை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஒருவேளை உணவிற்காக ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்து, பச்சிளம் குழந்தைகளைத் தாய் இல்லாத நிலைக்குத் தள்ளிய இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Muthu Mani

Recent Posts

மக்கள் பணத்தை தொட்ட யாரையும் சும்மா விட மாட்டோம்… ஊழல் ஒன்னு ஒன்னா வெளியே வரும்… ஏன்பா பயந்து நடுங்குறீங்க..? சட்டசபையை அதிர வைத்த முதல்வர் விஜய்..!!

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் விஜய், கடந்த தி.மு.க ஆட்சி குறித்து கடுமையான…

3 minutes ago

BREAKING: முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. திமுகவினர் பேரவையில் இருந்து வெளிநடப்பு..!!

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் விஜய், கடந்த தி.மு.க ஆட்சி குறித்து கடுமையான…

6 minutes ago

சட்டமன்றத்தில் பரபரப்பு…. “டாஸ்மாக்கில் பார்ட்டி ஃபண்ட்” CM விஜய் சொன்ன அந்த ஒரு வார்த்தை… திமுகவினர் கடும் அமளி…!!

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் உரையாற்றியபோது, டாஸ்மாக்கில்…

10 minutes ago

நம்ம ஆட்சிக்கு நாள் குறிக்குறாங்க… வெள்ளை அறிக்கை வெளியானதில் இருந்தே… CM விஜய் கொடுத்த ஷாக்… ஆடிப்போன எதிர்க்கட்சி..!!

"நம் ஆட்சிக்கு நாள் குறிப்பவர்களை மக்கள் பார்த்துக் கொள்வார்கள்" என்று முதலமைச்சர் விஜய் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்துள்ளார். சட்டப்பேரவையில்…

13 minutes ago

FLASH: “கட்சி தொடங்கி 2 ஆண்டுகளில் அவ்வளவு வலி, வேதனை” பேரவையில் முதல்வர் விஜய் உருக்கம்..!!

"கட்சி தொடங்கி இரண்டே ஆண்டுகளில் ஆட்சிக்கு வந்துவிட்டதாகக் கூறுகிறார்கள். ஆனால், இந்த 2 ஆண்டுகள் வலியும் வேதனையும் நிறைந்தது. பல்வேறு…

20 minutes ago

“ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால் தேவன் என்றாலும் விடமாட்டேன்” சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அதிரடி…!!

சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் பதிலுரையில், தமிழகத்தில் 2026 பொதுத்தேர்தலில் யாராலும் உடைக்கவே முடியாது என்று கருதப்பட்ட சாதி மற்றும் மத…

34 minutes ago