பைத்தியக்காரப் பயலுகளா..! அந்த பாழாய்ப்போன ஜலசந்தியைத் திறங்க.. ஈரானை தரம் தாழ்ந்த வார்த்தைகளால் திட்டித் தீர்த்த டொனால்ட் ட்ரம்ப்.. பெரும் பரபரப்பு..!!

Spread the love

மத்திய கிழக்கில் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) உடனடியாகத் திறக்கக் கோரி ஈரான் நாட்டுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மிகக் கடுமையான மற்றும் ஆவேசமான எச்சரிக்கையை விடுத்துள்ளார். தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) தளத்தில் பதிவிட்டுள்ள அவர், மிகவும் தரம் தாழ்ந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி ஈரானை விமர்சித்துள்ளார். உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் இந்த நீரிணைப் பகுதியை ஈரான் முடக்கியுள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக இந்த ஆக்ரோஷமான பதிவு வெளியாகியுள்ளது.

“அந்த பாழாய்ப்போன ஜலசந்தியைத் திறங்க பைத்தியக்கார பயலுகளா, இல்லையெனில் நீங்கள் நரகத்தை அனுபவிக்க நேரிடும்” என்று ட்ரம்ப் எச்சரித்துள்ளார். வரும் செவ்வாய்க்கிழமை அன்று ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்பதைச் சுட்டிக்காட்டும் வகையில், அன்றைய தினத்தை “மின் நிலைய நாள் மற்றும் பாலங்கள் நாள்” (Power Plant Day and Bridge Day) என அவர் வர்ணித்துள்ளார். ஈரானின் உட்கட்டமைப்புகள் மீது அமெரிக்கா மிகப்பெரிய அளவிலான தாக்குதலை நடத்தத் தயாராகி வருவதையே ட்ரம்பின் இந்த ‘கெடுபிடி’ எச்சரிக்கை உணர்த்துகிறது.

சுமார் 48 மணி நேர காலக்கெடுவை ஈரானுக்கு வழங்கியுள்ள ட்ரம்ப், அதற்குள் சுமூகமான உடன்பாட்டிற்கு வரவில்லை என்றால் விளைவுகள் மோசமாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார். அதே சமயம், மற்றொருபுறம் பேச்சுவார்த்தைக்கான வாய்ப்புகள் இருப்பதாகவும், ஈரானுடன் ஒப்பந்தம் ஏற்பட நல்ல வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ட்ரம்பின் இந்த முரண்பட்ட மற்றும் ஆவேசமான அணுகுமுறை சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையேற்றத்திற்கும் வழிவகுத்துள்ளது.

Soundarya

Recent Posts

என்னது… விஜய்யும் த்ரிஷாவும் ஒண்ணாவா?… ஜெகன் மோகன் ரெட்டி திருமணத்தில் நடந்த அதிரடி என்ட்ரி… உறைந்துபோன ரசிகர்கள்… இணையத்தை அதிரவைக்கும் வைரல் வீடியோ…!

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் இல்லத் திருமண வரவேற்பு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த…

9 minutes ago

“நவம்பர் 13-க்குப் பின் தமிழ்நாடு அரசியலில் மாபெரும் பூகம்பம்…. CM விஜய் ஆட்சிக்கே ஆபத்தா?”… திமுக-அதிமுக ரகசிய கூட்டணி?…. தலைமைச் செயலகத்தையே அதிரவைத்த உளவுத்துறை ரிப்போர்ட்….!

மே 13 அன்று சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் விஜய் 144 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவோடு தனது பெரும்பான்மையை நிரூபித்தார்.…

12 minutes ago

“கடவுள் இருக்கான் குமாரே”…. மரணம் தொட்டுச் சென்ற நொடி…. 8 அடி உயரத்திற்குப் பறந்த பைக் ஓட்டுநர்… அப்புறம் நடந்த அதிசயம்…. ஷாக்கிங் வீடியோ…!

ராஜஸ்தான் மாநிலம் சீகர் மாவட்டத்தில் உள்ள ரீங்கஸ் - காடூ ஷ்யாம் பிரதான சாலையில் பெரும் விபத்து ஒன்று நொடிக்…

21 minutes ago

FLASH NEWS: சீமானுக்கு ஆதரவு கிடையாது…. கடைசி நேரத்தில் கைவிரித்த திமுக…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!

தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள அம்பாசமுத்திரம் உள்ளிட்ட 5 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களத்தில் அரசியல் சூடுபிடித்துள்ள சூழலில், அம்பாசமுத்திரம் தொகுதியில்…

26 minutes ago

ஐயோ கொடுமையே… ரீல்ஸ் மோகத்தால் சீரழியும் இளைஞர்கள்… இந்தியாவை உலுக்கிய ஐ.எஸ்.ஐ-யின் அதிர்ச்சி வலைப்பின்னல்… இணையத்தில் வைரல்…!!

பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஐ.எஸ்.ஐ ஆதரவு பெற்ற ஷெஹ்சாத் பாட்டி தலைமையிலான தீவிரவாத வலைப்பின்னல், இந்திய இளைஞர்களை இலக்கு வைத்து…

30 minutes ago