“நீ செத்துப் போ” நீ ஒரு கோழைன்னு உன் பிள்ளைக்கிட்ட சொல்வேன்… மனைவியின் அந்த வாட்ஸ் அப் மெசேஜ்.. உயிரை விட்ட கணவர்..!!

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், மனைவியின் ஒரு கொடூரமான வாட்ஸ்அப் செய்தியால் மனமுடைந்த கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக, தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். தம்பதியினருக்கு இடையே நீண்ட நாட்களாக குடும்பப் பிரச்சினை இருந்து வந்த நிலையில், கணவர் எடுத்த இந்த விபரீத முடிவு அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக அந்த நபரின் மனைவி அவருக்கு அனுப்பிய வாட்ஸ்அப் செய்திதான் இந்த வழக்கின் முக்கியத் திருப்பமாக அமைந்துள்ளது. அதில், “நீ செத்துப் போ… நீ ஒரு கோழை என்று உன் குழந்தையிடம் நான் வளர்க்கும் போது சொல்வேன்” என்று மனைவி பதிவிட்டுள்ளார். தனது சொந்த மனைவியே தன்னை ‘கோழை’ என்று அழைத்ததும், எதிர்காலத்தில் குழந்தையிடம் தன்னைப்பற்றி தவறாகச் சித்திரிக்கப் போவதாகக் கூறியதும் அந்த இளைஞரை நிலைகுலையச் செய்துள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உயிரிழந்தவரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவரது அலைபேசியைச் சோதனையிட்டபோது மனைவியின் அந்த சர்ச்சைக்குரிய வாட்ஸ்அப் மெசேஜ் ஆதாரமாகக் கிடைத்துள்ளது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், மனைவியின் தூண்டுதல் காரணமாகவே இந்த தற்கொலை நிகழ்ந்ததா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Soundarya

Recent Posts

“தங்கம் விலையில் திடீர் திருப்பம்”… சந்தையில் ஏற்படப்போகும் மிகப்பெரிய மாற்றம்… நிபுணர்கள் வெளியிட்ட பகீர் தகவல்…!

உலகளாவிய சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தற்போது அதிரடி உயர்வைச் சந்தித்து வருகிறது. இதற்கு முதன்மையான காரணமாக ஈரான்…

3 minutes ago

தமிழக அரசியலில் திடீர் திருப்பம்… விஜய்க்கு எதிராக நடிகை சொர்ணமால்யா வெளியிட்ட அதிரடி வீடியோ… அதுக்கு அவர் சொன்ன காரணம் தான் ஹைலைட்…!

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், திரைத்துறையினரின் அரசியல் வருகையும் கருத்துகளும் விவாதப்…

8 minutes ago

“ஆசிரியர்களுக்கு அதிர்ச்சி.. மாணவர்களுக்கு மகிழ்ச்சி”… கோடை விடுமுறை அறிவிப்பில் செக் வாய்த்த பள்ளிக்கல்வித்துறை…!

தமிழகத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நாளை (ஏப்ரல் 17) முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது.…

13 minutes ago

“மசோதா எரிப்பு… கறுப்புக்கொடி போராட்டம்”… முதல்வர் ஸ்டாலினின் அதிரடி ஆக்‌ஷன்… அதிர வைக்கும் போஸ்ட்…!

மத்திய அரசின் தொகுதி மறுவரையறை (Delimitation) மசோதாவுக்கு எதிராகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரடியாகக் களமிறங்கி தனது கடுமையான…

26 minutes ago

திமுகவில் வெடித்த குடும்ப சண்டை… உதயநிதிக்கு கயல்விழி கொடுத்த மரண அடி… தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு…!

திமுக உட்கட்சி அரசியலில் நீண்டகாலமாக நிலவி வரும் புகைச்சல், தற்போது மு.க.அழகிரியின் மகள் கயல்விழியின் காட்டமான விமர்சனங்களால் மீண்டும் விஸ்வரூபம்…

31 minutes ago

FLASH NEWS: கார் கோர விபத்து… 8 பேர் பலியான சோகம்… கோயிலுக்குப் போன இடத்தில் நேர்ந்த பெரும் சோகம்…!

ஆந்திர மாநிலம் சிலகலடோனா பகுதியில் நிகழ்ந்த கோர சாலை விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவிலிருந்து மந்த்ராலயம் ராகவேந்திரா கோயிலுக்குப்…

38 minutes ago