கோவையில் பரபரப்பு..! கல்லூரி வளாகத்திலேயே மாணவிக்குக் கத்திக்குத்து… சக மாணவன் கைது… நடந்தது என்ன..??

By Soundarya on தை 22, 2026

Spread the love
கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில், ஹரஸ்வரன் என்ற மாணவன் சக மாணவி ஒருவரைச் சரமாரியாகக் கத்தியால் குத்தியுள்ளார். இந்தத் தாக்குதலில் மாணவியின் கழுத்து, கை மற்றும் முதுகு ஆகிய பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் சரிந்த மாணவியை அங்கிருந்தவர்கள் மீட்டு, உடனடியாக சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தகவல் அறிந்து வந்த போலீசார், தாக்குதல் நடத்திய மாணவன் ஹரஸ்வரனைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தத் தாக்குதலுக்கான பின்னணி என்ன? இது ஒருதலைக் காதல் விவகாரமா அல்லது இருவருக்கும் இடையே ஏற்பட்ட வேறு ஏதேனும் முன்விரோதமா என்பது குறித்துப் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். கல்லூரி வளாகத்திற்குள்ளேயே சக மாணவியைக் கத்தியால் குத்திய இந்தச் சம்பவம் மாணவர்கள் மற்றும் பெற்றோரிடையே பெரும் அதிர்ச்சியையும் பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.