கட்டுக்கடங்காத கூட்டம்…! சபரிமலை சாமி தரிசனத்திற்கு காத்திருந்த பெண் பக்தர் உயிரிழப்பு…. பெரும் சோகம்…!!

Spread the love

மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு நிகழ்ச்சிக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இன்று அதிகாலை முதல் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் திரண்டதால், பதினெட்டாம் படிக்கு அருகே அசாதாரணமான சூழல் ஏற்பட்டு, தள்ளுமுள்ளு ஏற்படும் அபாயம் ஏற்பட்டது.

சிறுவர்களுடன் வந்திருந்த பக்தர்கள் அதிகக் கூட்டம் மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாகக் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள். இந்த நிலையில், நீண்ட நேரம் வரிசையில் நின்றிருந்த கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த பெண் பக்தர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். அவரது உடல் திருவிதாங்கூர் தேவசம் போர்டு செலவில் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படும் எனத் தலைவர் கே. ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.

மேலும், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தப் பதினெட்டாம் படிப் பகுதியில் கூடுதலாக 200 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதற்கிடையே, கர்நாடகாவில் இருந்து 33 பக்தர்களை ஏற்றி வந்த பேருந்து கோட்டயம் மாவட்டம் எருமேலியில் விபத்துக்குள்ளானது. இதில் மூன்று பக்தர்கள் லேசான காயம் அடைந்தனர்.

Devi Ramu

Recent Posts

BREAKING: “பதவியை ராஜினாமா செய்ய முடியாது”…. சற்றுமுன் மம்தா பானர்ஜி பரபரப்பு அறிவிப்பு…!

மேற்கு வங்கத்தில் நிலவும் அரசியல் பரபரப்புகளுக்கு இடையே, முதலமைச்சர் பதவியில் இருந்து தாம் விலகப்போவதில்லை என மம்தா பானர்ஜி அதிரடியாக…

53 seconds ago

“கலைஞர் இதைக் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்”…. பழைய புகைப்படத்தைப் பகிர்ந்து RGV போட்ட பகீர் பதிவு…!

தமிழ்நாடு அரசியலில் 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் ஒரு மிகப்பெரிய வரலாற்று மாற்றத்தை நிகழ்த்தியுள்ளது. இதுவரை திராவிடக் கட்சிகளின் கோட்டையாக…

7 minutes ago

யார் இந்த ஜோதிடர் கனிமொழி?… அதிமுக கோட்டை காலி… கோவையில் கனிமொழி சந்தோஷ் செய்த அந்த மேஜிக்… மிரண்டு போன அரசியல் கட்சிகள்….!

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் முடிவுகள் கோவை மண்டலத்தின் அரசியல் வரைபடத்தையே மாற்றி அமைத்துள்ளன. குறிப்பாக, அதிமுகவின் எஃகு கோட்டையாகக்…

11 minutes ago

“35% வாக்கு வங்கி… 108 எம்.எல்.ஏக்கள்”… விஜய் ஜெயிக்க முக்கிய காரணமே இதுதானா?… பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய் வெளியிட்ட சீக்ரெட்…!

தமிழக அரசியல் வரலாற்றில் சுமார் 59 ஆண்டுகளாக நீடித்து வந்த திமுக - அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளின்…

20 minutes ago

“விஜய் அண்ணா என்னையும் கட்சியில் சேர்த்துக்கோங்க”… கண்ணீரோடு விஜயலட்சுமி வெளியிட்ட வீடியோ….!

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மாநில அரசியலில் இதுவரை கண்டிராத ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்கியுள்ளன. நடிகர் விஜய்யின்…

26 minutes ago

“ஒரே ஒரு ஓட்டு… மொத்தமாக மாறிய தலைவிதி”…. 25 ரவுண்டு வரை லீடிங், 26-வது ரவுண்டில் ட்விஸ்ட் – பெரியகருப்பனை வீழ்த்திய தவெக வேட்பாளர்..!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 2026 தேர்தல் முடிவுகள், எத்தனையோ சினிமா கிளைமாக்ஸ்களை விஞ்சும் வகையில் பெரும் பரபரப்புடன்…

32 minutes ago