தமிழக அரசியல் வரலாற்றில் சுமார் 59 ஆண்டுகளாக நீடித்து வந்த திமுக – அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்திற்கு 2026 சட்டமன்றத் தேர்தல் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. நடந்து முடிந்த தேர்தலில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 இடங்களைக் கைப்பற்றி, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து ஆட்சியைப் பிடித்துள்ளது. 1967-ம் ஆண்டிற்குப் பிறகு திராவிடக் கட்சிகள் அல்லாத ஒரு மாற்று சக்தி ஆட்சியில் அமர்வது இதுவே முதல்முறை என்பதால், ஒட்டுமொத்த தமிழகமும் இந்த அரசியல் மாற்றத்தை வியப்புடன் நோக்கி வருகிறது.
இந்த இமாலய வெற்றிக்கு மிக முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுவது தமிழகத்தின் இளைய தலைமுறை வாக்காளர்கள் தான். மொத்த வாக்காளர்களில் 40% பேர் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் என்ற நிலையில், மாற்றத்தை விரும்பிய அவர்களின் ஒட்டுமொத்த ஆதரவும் தவெக பக்கம் திரும்பியுள்ளது. பிரபல பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, தவெக 35 சதவீத வாக்கு பங்களிப்புடன் (1.7 கோடி வாக்குகள்) முதலிடத்தைப் பிடித்துள்ளது. பாரம்பரிய வாக்கு வங்கிகளைக் கொண்ட திமுக 24 சதவீதத்தையும், அதிமுக 21 சதவீதத்தையும் மட்டுமே பெற்று பெரும் சரிவைச் சந்தித்துள்ளன.
தேர்தல் முடிவுகளின்படி, ஆளும் கட்சியாக இருந்த திமுக கூட்டணி 74 இடங்களையும், அதிமுக கூட்டணி 53 இடங்களையும் பெற்றுள்ளன. திமுக 60 இடங்களில் தனித்து வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றாலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல முக்கிய அமைச்சர்கள் தோல்வியைத் தழுவியுள்ளது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. அதேபோல், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டு, எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் இழந்துள்ளதால் அக்கட்சியின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
இதர கட்சிகளைப் பொறுத்தவரை, சீமானின் நாம் தமிழர் கட்சி 4% வாக்குகளுடன் தனது இருப்பைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. தேசியக் கட்சிகளான காங்கிரஸும், பாஜகவும் தலா 3% வாக்குகளைப் பெற்று சமநிலையில் உள்ளன. அரை நூற்றாண்டு கால இருமுனைப் போட்டியைத் தகர்த்து, 1.7 கோடி மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ள விஜய், தமிழக அரசியலில் ஒரு புதிய பாதையைத் தொடங்கி வைத்துள்ளார். இளைஞர்களின் எழுச்சியால் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம், தமிழக அரசியல் திசையை முழுமையாக மாற்றியமைத்துள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில்,…
தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தைப் படைத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது முதல் தேர்தலிலேயே 108…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், முதியவர் ஒருவர் கேக் கடைக்குச் சென்று அங்குள்ள கேக்கின் விலையைக் கேட்கிறார்.…
பிரபல மலையாள நடிகர் சந்தோஷ் நாயர் (66) கேரளாவில் நடந்த சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த செய்தி திரையுலகினரிடையே பெரும்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் சூழலில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான…
2026 தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இதில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி…