பணத்திற்காக பெற்ற மகளையே விற்ற தந்தை…! “17 வயது சிறுமியை 10 பேர் மாறி, மாறி… ” உடந்தையாக பாட்டியும்…! நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

By Devi Ramu on தை 8, 2026

Spread the love

கர்நாடக மாநிலம் சிக்மகளூர் அருகே 17 வயது சிறுமியை அவரது தந்தையே பணத்திற்காக விபச்சாரத்தில் தள்ளிய கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. தாயை இழந்து உறவினர் வீட்டில் வளர்ந்து வந்த சிறுமியை, அவரது தந்தை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று மங்களூருவைச் சேர்ந்த ஒரு கும்பலிடம் விற்றுள்ளார். இரண்டு நாட்களாக ஒரு வீட்டில் சிறை வைக்கப்பட்ட அந்தச் சிறுமியை, சுமார் 10-க்கும் மேற்பட்ட நபர்கள் அடுத்தடுத்து பாலியல் வன்கொடுமை செய்து சீரழித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி இதுகுறித்து தனது பாட்டியிடம் முறையிட்டபோது, அவரும் இந்தச் செயலுக்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மனமுடைந்த சிறுமி துணிச்சலுடன் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, அவரது தந்தை, பாட்டி மற்றும் புரோக்கர் உட்பட 12 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். சொந்த மகளைத் தந்தையே பணத்திற்காகச் சீரழித்த இந்த மனிதாபிமானமற்ற செயல் அந்தப் பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.