#image_title
இந்தியாவில் பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பு இருக்கிறதா என்று கேட்டால் இல்லை என்ற பதிலை வேதனையோடு தான் சொல்ல வேண்டி இருக்கிறது. ஏனென்றால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எல்லா இடத்திலும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. சட்டங்கள் கடமையாக்கப்பட்டால் தான் பல குற்றங்கள் குறையும். இந்தியாவிலேயே பல இடங்களில் பாலியல் துன்புறுத்தல்கள் ஏமாற்றுவது போன்ற பல சம்பவங்கள் அன்றாடம் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.
அதுபோல ஒரு சம்பவம் தற்போது பெங்களூருவில் நடந்திருக்கிறது. அது என்னவென்றால் பெங்களூர் விமான நிலையத்தில் வந்து இறங்கிய ஒரு பெண் வீட்டிற்கு செல்வதற்காக OLA டாக்ஸியை புக் செய்து இருக்கிறார். அப்போது OLA டேக்ஸி எனக் கூறிய நபர் ஒருவர் அந்த பெண்ணை ஏற்றி சென்று இருக்கிறார்.
எப்போதும் OLA டாக்சி வரும்போது காரில் இருக்கும் டிரைவர் நமக்கு வந்திருக்கும் ஓடிடியை கேட்பார். ஓடிடியை கேட்டு அறிந்த பின்பு தான் காருக்குள் ஏற்றி சொல்வார்கள். ஆனால் இந்த பெண்மணி இடம் அந்த காரை ஓட்டிச் சென்ற நபர் எந்த ஒரு ஓடிடியையும் கேட்காததால் இந்த பெண்ணிற்கு சந்தேகம் ஏற்பட்டு இருக்கிறது.
உடனே அந்தப் பெண் டிரைவரை காரை நிறுத்த சொல்லி பிரச்சனை செய்திருக்கிறார். உடனே அந்த டிரைவர் அருகில் இருந்த பெட்ரோல் பங்கில் வண்டியை நிப்பாட்டி விட்டு அதிகப்படியான பணத்தை கேட்டிருக்கிறார். உடனே அந்தப் பெண் சுதாரித்துக் கொண்டு காவல் துறைக்கு போன் செய்து புகார் அளித்திருக்கிறார். உடனடியாக அங்கு வந்த காவல் துறையினர் அந்த நபரை கைது செய்தனர்.
இந்த சம்பவம் பெங்களூர் மக்களை நடுங்க வைத்திருக்கிறது என்று சொல்லலாம். ஏதோ அந்த டிரைவர் உடனடியாக காரை நிறுத்தியதால் போய்விட்டது. இதே அவர் வேறு ஏதும் நோக்கத்தினால் அந்த பெண்ணை கடத்திச் சென்றிருந்தாலோ மற்ற அசம்பாவிதங்கள் நடந்து இருந்தாலும் இது மிகப்பெரிய பிரச்சினையாக ஆகியிருக்கும். இதுபோல OLA டாக்ஸி என்று சொல்லிக்கொண்டு பல நபர்கள் ஏமாற்றுவதற்காக வருகிறார்கள். பெண்கள் விழிப்புடன் இருங்கள் என்று காவல்துறையினர் கூறி இருக்கிறார்கள்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…
ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…
நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…
அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…