#image_title
இந்தியாவில் பல அதிசயங்கள் இருக்கிறது. உலகின் 8 அதிசயங்களில் ஒன்றாக திகழ்வது இந்தியாவின் தாஜ்மஹால். காதலின் அடையாளமாக திகழ்வது தாஜ்மஹால். எல்லோரும் காதல் என்றாலே பரிசாக தாஜ்மஹால் ஒன்றை வாங்கி செல்வர். மன்னர் ஷாஜஹான் தனது காதலி மும்தாஜ் காக தாஜ்மஹாலை பார்த்து பார்த்து கட்டினார்.
பல சிற்ப வேலைப்பாடுகளுடன் அறியாவகை கற்களை கொண்டு உருவாக்கப்பட்டது இந்த தாஜ்மஹால். ஆனால் இதில் வருத்தம் என்னவென்றால் அவர் பார்த்து பார்த்து தனது காதலிக்காக கட்டிய தாஜ்மஹாலை மும்தாஜ் பார்க்கவே இல்லை. மும்தாஜ் இறந்ததற்கு பிறகுதான் இந்த தாஜ்மஹாலை கட்டினார். தாஜ்மஹாலுக்கு நடுவில் தனது காதலி மும்தாஜை புதைக்கவும் செய்திருக்கிறார். சொல்ல போனால் இது ஒரு கல்லறை தான்.
எப்படி ஷாஜகான் மும்தாஜ்க்கு தாஜ்மஹால் கட்டினாரோ அதேபோல் தமிழ்நாட்டில் ஒரு ஜமீன்தார் தனது காதலிக்காக தாஜ்மஹால் போன்று கல்லறையை கட்டி இருக்கிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா. திருப்பத்தூர் வாணியம்பாடியில் தான் அந்த நினைவு சின்னமும் அமைந்திருக்கிறது.
அங்கே தமிழ்நாடு ஆந்திரா எல்லை கோட்டுக்கு அருகே சமாதித்தோப்பு என்ற இடத்தை தொல்லியல் துறை ஆய்வாளர்கள் ஆய்வு செய்தபோது அங்கே அந்த தோப்பில் பாழடைந்த நிலையில் இரண்டு அடுக்கு கட்டடம் தென்பட்டது. அந்த இடத்தைப் பற்றிய வரலாற்றை திருப்பி பார்க்கும்போது இந்த இடத்தை கங்குந்தி ஜமீந்தார்கள் ஆட்சி செய்து வந்திருக்கின்றனர். ஜமீன் ஆட்சியில் கடைசியாக ஆட்சி செய்தவர் ஜமீன்தார் வெங்கடபதி நாராயண காரு ஆவார். ஜமீன்தார் ஆட்சி செய்த காலத்தில் ஒரு மன்னர் தான் காதலி நினைவாக இந்த கட்டிடத்தை எழுப்பி கல்லறை அமைத்து இருக்கிறார் என்று அப்பகுதியை சேர்ந்த மக்கள் கூறுகின்றனர்.
இந்த கட்டிடம் தமிழ்நாட்டின் பாரம்பரிய கட்டடக் கலையை பயன்படுத்தி கட்டி இருக்கிறார்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அதாவது இரண்டடுக்கு சுற்று சுவர் வைத்து செங்கலுக்கு நடுவே கருப்பட்டி பதநீர் சுண்ணாம்பு கடுக்காய் நாட்டுக்கோழி முட்டையின் வெள்ளை கரு ஆகியவற்றை பயன்படுத்தி கட்டி இருக்கிறார்கள். இதில் சோகம் என்னவென்றால் இந்த கல்லறை நினைவு சின்னம் மிகவும் அழிவின் விளிம்பில் இருக்கிறது என்பதுதான்.
ஸ்காட்லாந்தில் வசிக்கும் தமிழக இளம்பெண் ஒருவர், தனது ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்காக ஒன்றரை லட்சம் ரூபாய் செலவு செய்து தமிழகம்…
நடிகர் விஜய் அரசியலில் களம் இறங்கி 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியைத் தொடங்கியதில் இருந்து, அவருக்குப் பல்வேறு சவால்கள்…
அமெரிக்க அதிபர் டிரம்ப் போர் நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டிப்பதாக அறிவித்த சில மணிநேரங்களிலேயே, ஈரான் கடல் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ள…
சென்னை வடபழனியைச் சேர்ந்த நவீன் என்பவரது தாத்தா ராஜேந்திரனுக்குச் சொந்தமான 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலம், ஆள்மாறாட்டம் மூலம்…
அசாத்திய புத்திசாலித்தனம் மற்றும் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஈரானுக்கு எதிரான போரில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் மொசாட் ஏஜென்ட் 'M'…
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் மோதல் போக்கு இன்னும் முழுமையாகக் தணியாத நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி…