ஒத்தைக்கு ஒத்தையா சண்டைக்கு வாடா..! செம தில்லுடன் மோதிய குட்டி மான்… “போடா பொடிப்பயலே” என அசால்டாக நின்ற காண்டாமிருகம்…!!

By Soundarya on தை 10, 2026

Spread the love

போலந்து நாட்டின்  ரொக்ளா (Wrocław) உயிரியல் பூங்காவில், சுமார் 13 கிலோ எடை கொண்ட சிறிய முண்ட்சாக் (Muntjac) வகை ஆண் மான் ஒனறு, தன்னை விட 130 மடங்கு பெரிய, அதாவது 1.7 டன் எடையுள்ள ‘மருஸ்கா’ (Maruśka) என்ற பெண் காண்டாமிருகத்துடன் மோதுவது போன்ற வீடியோ 2026 ஜனவரி 9 அன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.  பனி படர்ந்த அந்தப் பூங்காவில், குட்டி மான் எவ்வித அச்சமுமின்றி காண்டாமிருகத்தை முட்டித் தள்ள முயற்சிப்பதையும், பின் தொடர்ந்து துரத்துவதையும் மக்கள் வியப்புடன் பார்த்தனர்.

இந்த வினோதமான நடவடிக்கைக்கு அந்த மானின் உடலில் சுரக்கும் ‘டெஸ்டோஸ்டிரோன்’ (Testosterone) ஹார்மோன் அதிகரிப்பே காரணம் என உயிரியல் பூங்கா அதிகாரிகள் விளக்கியுள்ளனர். அதன் இணையின் இனப்பெருக்கக் காலம் என்பதால், தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட இது போன்ற செயல்களில் அந்த மான் ஈடுபட்டதாகத் தெரிகிறது. அசுர பலம் கொண்ட காண்டாமிருகம் அந்த மானைத் தாக்காமல், மிகவும் பொறுமையுடனும் விளையாடும் மனநிலையுடனும் இருந்ததாகப் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.