விஜய் அண்ணா உஷாரா இருங்க… அவங்களை நம்பாதீங்க… புது குண்டை தூக்கிப்போட்ட தேமுதிக நிர்வாகி விஜய பிரபாகரன்..!!

By Soundarya on தை 10, 2026

Spread the love

விஜயகாந்தின் மகனும் தேமுதிக முக்கிய நிர்வாகியுமான விஜய பிரபாகரன், தவெக தலைவர் விஜய்யை எச்சரிக்கும் வகையில் விருதுநகரில் பேசியுள்ளார். காங்கிரஸ் கட்சி தனது பேரம் பேசும் சக்தியை அதிகரிப்பதற்காகவே தற்போது விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக அவர் விமர்சித்துள்ளார். இது ஒரு தூண்டில் போன்றது என்றும், இதில் விஜய் சிக்கிக்கொள்ளக் கூடாது என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், விருதுநகரில் காங்கிரஸ் கட்சி கடந்த காலங்களில் என்ன செய்தது என்பது தனக்கு நன்றாகத் தெரியும் என்று குறிப்பிட்ட விஜய பிரபாகரன், அவர்கள் கூட்டணிக்கு வருவது போல் நடித்துத் தங்களுக்குத் தேவையான பேரத்தை முடித்துக் கொண்டு பழைய இடத்திலேயே நீடிப்பார்கள் என்று சுட்டிக்காட்டினார். இதனை விஜய் தரப்பு ஏற்றுக் கொண்டாலும் இல்லாவிட்டாலும், ஒரு நல்நோக்கத்திற்காகவே தாம் இதனைச் சொல்வதாக அவர் தனது உரையில் வலியுறுத்தியுள்ளார்.