“இனி அவரோட வாழ முடியாது…” ஒரு குறட்டை… 5 ஆண்டு கால காதல் வாழ்க்கை காலி?… கடைசியில் ட்விஸ்ட் வைத்த பெண் கவுன்சிலர்…நெகிழ்ச்சி சம்பவம்…!

By Visaka on ஆடி 5, 2026

Spread the love

மத்திய பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்த தம்பதியினர், கடந்த 5 ஆண்டுகளாக மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை நடத்தி வந்தனர். இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. கணவன்-மனைவி இடையே அன்யோன்யம் குறையாத போதிலும், கடந்த சில மாதங்களாக கணவர் விட்ட அதிகப்படியான சத்தத்துடனான குறட்டை, மனைவியின் தூக்கத்தைக் கெடுத்து நிம்மதியை பறித்துள்ளது. இந்த குறட்டைப் பிரச்சனை இருவருக்குள்ளும் பெரிய வாக்குவாதமாக மாறி, இறுதியில் விரக்தியடைந்த மனைவி விவாகரத்து கோரும் அளவிற்கு நிலைமை மோசமானது.

   

இந்த விவகாரம் தம்பதியினருக்கு ஆலோசனைகளை வழங்கும் கவுன்சிலர் ரிதா துளியிடம் சென்றபோது, அவர் ஒரு சாதுரியமான தீர்வைக் கையாண்டார். இருவரையும் மூன்று மாதங்கள் தற்காலிகமாகப் பிரிந்து வாழுமாறு அவர் அறிவுறுத்தினார். இந்த குறுகிய காலப் பிரிவு, இருவருக்கும் ஒருவரையொருவர் எவ்வளவு நேசிக்கிறோம் என்பதையும், தங்களின் தேவையையும் புரிய வைத்தது. மூன்று மாதங்களுக்குப் பிறகு மீண்டும் கவுன்சிலரைச் சந்தித்தபோது, கணவரைப் பிரிந்திருக்க முடியாது என்பதை உணர்ந்த மனைவி, தனது விவாகரத்து முடிவைக் கைவிட்டு கணவருடன் மீண்டும் இணைந்து வாழச் சம்மதித்தார். கவுன்சிலரின் இந்த ஒற்றை யோசனை ஒரு குடும்பம் சிதறாமல் தடுத்தது.