அட கொடுமையே… நொடிப் பொழுதில் கட்டுப்பாட்டை இழந்து… ஷோரூமுக்குள் புகுந்த கார்… நெஞ்சை நடுங்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்…!!

By Swetha on ஆடி 30, 2026

Spread the love

நூஹ் சாலையில் உள்ள சாரோடா பேருந்து நிறுத்தத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில், அதிவேகமாக வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான திடுக்கிடும் காட்சி பதிவாகியுள்ளது. புதன்கிழமை நடந்த இந்தச் சம்பவத்தில், காரானது முதலில் ஒரு வழிப்போக்கர் மீது மோதி, பின்னர் அங்கிருந்த பல வாகனங்களைத் தள்ளிக்கொண்டு, இறுதியில் ஒரு டைல்ஸ் ஷோரூமிற்குள் புகுந்து நின்றுள்ளது. காரின் மோதிய வேகத்தில் அப் பாதசாரி காற்றில் தூக்கி வீசப்பட்டதைக் கண்டு அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.

இந்த விபத்து நடந்தவுடன், அருகில் இருந்த பொதுமக்கள் உடனடியாக ஓடிவந்து காயமடைந்தவர்களுக்கு உதவினர். அதிகாரிகளின் தகவல்படி, இந்த பயங்கர விபத்தில் மூன்று பேர் பலத்த காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் அவசர சிகிச்சைக்காக நல்ஹாரில் உள்ள ஷஹீத் ஹசன் கான் மேவாதி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

   

https://twitter.com/HateDetectors/status/2082721430760989091/video/1

   

இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்துக்கான துல்லியமான காரணத்தை கண்டறிய, அதிகாரிகள் அப்பகுதியில் கிடைத்த சிசிடிவி காட்சிகளை விரிவாக ஆய்வு செய்து வருகின்றனர்.