‘கன்னித் தன்மை’ கொண்ட பிராமண பெண் வேணும்… விவாகரத்தான ஐஐடி பட்டதாரிக்கு வந்த விசித்திர ஆசை… தரகர் கொடுத்த அதிரடி செக்.. கிழிந்து தொங்கும் ஆணாதிக்கம்..!!

By Soundarya on சித்திரை 23, 2026

Spread the love

ஐஐடி (IIT) பட்டதாரியும், ஒரு நிறுவனத்தின் இயக்குனருமான 37 வயதுடைய விவாகரத்தான நபர் ஒருவர், மணப்பெண் தேடுவதற்காக விதித்த விசித்திரமான நிபந்தனைகள் இணையத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளன. தனக்குத் தேடும் பெண் 30 வயதிற்கு உட்பட்டவராகவும், பிராமண சமூகத்தைச் சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும் என்பதுடன், மிக முக்கியமாக அந்தப் பெண் ‘கன்னித் தன்மை’ (Virginity) கொண்டவராக இருக்க வேண்டும் என அவர் பிடிவாதம் பிடித்துள்ளார். நவீனக் கல்வியும், உயர் பதவியும் பெற்ற ஒருவரின் இந்த பிற்போக்குத்தனமான எதிர்பார்ப்பு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

திருமணத் தரகர் ஓண்ட்ரிலா கபூர் இது குறித்து வெளியிட்டுள்ள வீடியோவில், அந்த நபரின் கோரிக்கைகள் ஆணாதிக்க மனோபாவத்தின் உச்சம் என்றும், இவ்வளவு பிற்போக்குத்தனமான ஒருவருக்குப் பெண் பார்க்கத் தான் விரும்பவில்லை என்றும் கூறி அவரது வாய்ப்பை நிராகரித்துள்ளார். “கல்வி என்பது வெறும் பட்டமல்ல, அது சிந்தனையிலும் இருக்க வேண்டும்” எனப் பலரும் இந்தச் சம்பவத்தை வைத்து அந்த நபரைச் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஓண்ட்ரிலா கபூரின் இந்தத் துணிச்சலான முடிவு தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.