செருப்பு கடை ஒன்றில் வாடிக்கையாளர் ஒருவர் செருப்பு தேர்வு செய்வதில் தீவிரமாக இருந்தபோது, அவரது பாக்கெட்டிலிருந்து சிறுவன் ஒருவன் மிகச் சாமர்த்தியமாக பர்ஸைத் திருடிச் சென்ற அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது.
கடை ஒன்றில் வாடிக்கையாளர் ஒருவர் தனக்குத் தேவையான செருப்பை கையில் எடுத்துப் பார்த்துக் கொண்டு செருப்பு வாங்குவதில் கவனமாக இருந்துள்ளார். அப்போது அவருக்கு மிக அருகில் அமர்ந்திருந்த சிறுவன் ஒருவன், அந்த நபர் கவனக் குறைவாக இருப்பதைப் பயன்படுத்திக் கொண்டு, அவரது முன்பக்கப் பாக்கெட்டில் இருந்த பர்ஸை அவர் அறியாதவண்ணம் சாமர்த்தியமாக வெளியே எடுத்துத் திருடியுள்ளான்.
இந்தத் திருட்டுச் சம்பவம் முழுவதும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த நிலையில், அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்தத் திருட்டைக் கண்டு அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள், பொது இடங்களுக்குச் செல்லும்போது தங்களின் உடமைகளைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும், எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
