17 வயதில் அந்த புத்தகம் படித்ததால் வீட்டில் மாட்டினேன்.. இளமைப் பருவத்தை பகிர்ந்த மிஷ்கின்.. ரசிகர்கள் ஷாக்..!!

By Divyamayakannan on புரட்டாதி 2, 2025

Spread the love

பிரபல இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் அனுராக் காஷ்யப் இணைந்து தயாரித்துள்ள பேட் கேர்ள் (Bad girl) திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக உள்ளது. வர்ஷா பரத் இயக்கியுள்ளார், வெற்றிமாறன் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். அஞ்சலி சிவராமன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் சாந்திப்பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், டீஜே, மற்றும் பல நடித்துள்ளனர். இசையமைப்பாளராக அமித் த்ரிவேடி மேற்கொண்டுள்ளார். இப்படம் டீனேஜ் பெண் வளரும் சூழலில் ஏற்படும் ஆசை, கனவு, இச்சை என அனைத்தையும் அனுபவிக்கிறாள் என்பதை இப்படம். படத்தின் பிரீ ரிலீஸ் நடந்து முடிந்த தருணத்தில், கிராஸ் ரூட் ப்லிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை மூட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

அந்த விழாவில் இயக்குனர் மிஷ்கின் கொடுத்த ஸ்பீச். நான் 17 வயதில் இருக்கும் போது மூன்று காம புத்தகங்களை வாங்கி மறைத்து படித்துள்ளேன். அம்மா மார்க்கெட் சென்ற பிறகு படிப்பேன். ஒரு நாள் அம்மா கண்டுபிடித்து புத்தகத்தை எடுத்து மேஜை மீது வைத்தார். என் அம்மா இதுவே 17 வயது பெண் இதுபோன்ற செயலை செய்ய மாட்டாள் ஏனென்றால் இந்த உலகம் பெண்ணிற்கு அந்த சுதந்திரத்தை கொடுக்கவில்லை என்று கூறினார்.