சீச்சீ இப்படியும் கூடவா இருப்பாங்க…. கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி…..திடுக்கிடும் சம்பவம்….!

By Srimathi on புரட்டாதி 2, 2025

Spread the love

உத்திரபிரதேசத்தை சேர்ந்த திலீப், தனது மனைவியின் தங்கையான பிரகதியை மார்ச் 10, 2025 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். மேலும் பிரகதி 4 வருடங்களாக அனுராக் என்பவரை காதலித்து வந்தார் திருமணத்திற்கு பிறகும் அவள் தனது காதலனுடன் தொடர்பில் இருந்ததாக தெரிய வருகிறது. பிரகதி, அனுராக் உடன் சேர்ந்து திலீப்பை கொலை செய்து அவர் சொத்துக்களை கைப்பற்ற திட்டமிட்டார்.

இதனைத் தொடர்ந்து மார்ச் 19, 2025 அன்று  திலீப் தனது வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்பொழுது அங்கே பைக்கில் வந்த மர்ம நபர்கள், திலீப்பை தடுத்து நிறுத்தி அவரை அவர்களுடன் அழைத்துச் சென்றனர். பின் அவரை சரமாரியாக தாக்கி, துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி ஓடினர்.

   

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, படுகாயம் அடைந்த திலீப்பை மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த திலீப், கடந்த மார்ச் 21 ஆம் தேதி உயிரிழந்தார். மேலும் இந்த வழக்கு குறித்து சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போலீசாருக்கு, முக்கோண காதல் கதை தெரிய வந்தது. அதாவது திலீப்பின் மனைவி பிரகதி, அனுராக் என்பவரை காதலித்து வந்ததாகவும், அவர்கள் இருவரும் சேர்ந்து ஒப்பந்த கொலையாளிகளை வைத்து திலீப்பை கொன்றதும் தெரிய வந்தது. இந்த வழக்கில் ஈடுபட்ட அனுராக், பிரகதி உள்பட 6 நபர்களை போலீசார் கைது செய்தனர்.