காவடி எடுத்து வந்த பக்தரிடம், தன் குழந்தையுடன் ஆசிபெற்ற இஸ்லாமிய பெண்!… இது தாங்க உண்மையான தமிழ்நாடு!… வைரல் வீடியோ…

By Begam

Published on:

சமூக வலைத்தளங்களில் அவ்வப்பொழுது சில வீடியோக்கள் வைரலாகி மிகவும் ட்ரெண்டாகி வருகிறது. அந்த வகையில் தற்பொழுது காவடி எடுத்து வந்த பக்தரிடம் தன் குழந்தையுடன் ஆசி பெற்ற இஸ்லாமிய பெண் ஒருவரின் வீடியோ ஒன்று வைரலாக்கப்பட்டு வருகிறது. நாட்டு மக்களிடையே சமத்துவம் என்ற ஒரு உணர்வு கண்டிப்பாக இருக்க வேண்டும். அது நம் தமிழ்நாட்டில் அதிகம் உள்ளது என்றே கூறலாம்.

   

குறிப்பாக நாம் பார்க்கும் பொழுது கண்டிப்பாக ஒரு இஸ்லாமியனுக்கு ஒரு ஹிந்து மத, கிறிஸ்டியன்  மத பிரண்டாவது இருப்பார்கள். நம் தமிழ்நாட்டில் இந்து, முஸ்லிம், கிறிஸ்டியன் எந்த வேறுபாடு காட்டாமல் அனைவரும் அனைவரிடமும் சமத்துவத்துடன் பழகி வந்து கொண்டுள்ளனர். இதற்கு சான்றாக பல்வேறு சம்பவங்கள் அவ்வப்பொழுது நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

ஆபத்து காலத்தில் உதவுவது ,மனிதநேயத்துடன் செயல்படுவது என மதத்தை விட்டு விட்டு அனைவரும் ஒன்று சேர்ந்துதான் எப்பொழுதும் நம் தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகின்றனர். ஹிந்து மதத்தவர்கள் இஸ்லாமிய பள்ளிவாசலுக்கு சென்று தங்கள் குழந்தைகளுக்கு ஓதி பார்த்து செல்வதும், இஸ்லாமியர்கள் கோயிலுக்கு சென்று அங்குள்ள பூசாரியிடம் தங்கள் குழந்தைக்கு மந்திரிக்க செல்வதும் என்று மதரீதியாக இல்லாமல் அவர்கள் மதநல்லிணக்கத்தோடு மட்டுமே செயல்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தற்பொழுது காவடி எடுத்து வந்த பக்தரிடம் தன் குழந்தையுடன் ஆசிர்வாதம் பெற்ற இஸ்லாமிய பெண் ஒருவரின் வீடியோ ஒன்று இணையத்தில் படுவைரலாக்கப்பட்டு வருகிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் ‘இதுதான் உண்மையான தமிழ்நாடு’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த வைரல் வீடியோ ….

 

View this post on Instagram

 

A post shared by Galatta Media (@galattadotcom)