அடேங்கப்பா… எல்லாருமே ரெண்டு ரெண்டா இருக்காங்களே?… சர்ச்சில் ஒரே குழப்பம்… கேரளாவில் நடந்த விசித்திர இரட்டைத் திருமணம்…!

By Swetha on ஆவணி 2, 2026

Spread the love

கோட்டயம் அருகே உள்ள சர்ச்சில் அண்மையில் ஒரு அபூர்வத் திருமணம் நடைபெற்றது. சிறுவயதிலிருந்தே இரட்டையர்களையே திருமணம் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த மாகி மேரி மற்றும் மரியா மேரி ஆகிய இரட்டைச் சகோதரிகள், அதேபோல இரட்டைச் சகோதரர்களான விஷ்ணு மற்றும் ஜிஷ்ணுவை மணந்துகொண்டனர். மணமக்களின் நீண்ட நாள் ஆசை இதன் மூலம் நனவானது.

இந்தத் திருமணத்தின் மிகவும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், திருமணச் சடங்குகளை முன்னின்று நடத்திய பாதிரியார்களும் இரட்டையர்களாகவே அமைந்தனர். பாதிரியார்கள் ஜோஜி மற்றும் ஜோஜி மேத்யூ இணைந்து திருமண சடங்குகளை நடத்தி வைத்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

   

அதுமட்டுமன்றி, திருச்சபையில் வழிபாட்டு உதவிகளைச் செய்த சிறுவர்களும் இரட்டையர்களாகவே இருந்தனர். மணமக்கள், பாதிரியார்கள், வழிபாட்டு உதவியாளர்கள் என அனைவரும் இரட்டையர்களாகவே அமைந்த இந்த விசித்திரமான திருமணம் சமூக வலைதளங்களில் பலரின் கவனத்தையும் ஈர்த்து வைரலாகி வருகிறது.