கர்நாடக மாநிலத்தில் வாழை தோட்டத்தில் கடந்த 15 ஆம் தேதி பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்தப் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்தப் பெண் பக்கத்து கிராமத்தை சேர்ந்தவர் என்பதும் 45 வயதான அவரை யாரோ கொலை செய்து உடலை வாலை தோட்டத்திற்குள் வீசியதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்திய நிலையில் கடந்த 15ஆம் தேதி கொலை செய்யப்பட்ட பெண்ணும் அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த 17 வயது சிறுவனும் சண்டை போடுவதை ஒருவர் பார்த்துள்ளார்.
இது குறித்து அவர் போலீசில் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து போலீசார் அந்த சிறுவனை பிடித்து விசாரித்த போது அந்த சிறுவன், பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டான். 45 வயதான அந்த பெண் கணவரை இழந்து தனியாக வசித்து வந்த நிலையில் விவசாய கூலி வேலைக்கு சென்று வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த தம்பதி ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளன. அந்த வீட்டுக்கு செல்லும் இந்த பெண் குழந்தையை அன்பும் பாசமும் காட்டி வளர்த்து வந்துள்ளார்.
தன்னுடைய சொந்த மகனைப் போல நினைத்து அந்த குழந்தை மீது அன்பு காட்டியுள்ளார். அந்த சிறுவன் வளர்ந்த பிறகு அவனை பள்ளிக்கு அனுப்புவது மற்றும் தேவையான உதவிகளை செய்வது ஆகியவற்றை தாய் அந்தஸ்திலிருந்து செய்தார். ஆனால் அந்த சிறுவன் தாய் போல அன்பு காட்டிய பெண்ணை வேறொரு கண்ணோட்டத்தில் பார்த்த நிலையில் கடந்த 15 ஆம் தேதி பக்கத்து கிராமத்துக்கு வாழை தோட்டத்திற்கு பின் வேலைக்குச் சென்று இருந்த போது அங்கு வந்த சிறுவன் யாருமில்லாததை கவனித்து அந்த பெண்ணிடம் காம இச்சையை தீர்க்க முயன்றுள்ளான். மகனைப் போல நினைத்து வளர்த்தவன் தன்னிடம் தவறாக நடக்க முயற்சித்ததால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் அங்கிருந்து செல்ல முயற்சித்தார்.
ஆனால் அந்த சிறுவன் பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்த நிலையில் கத்தி கூச்சலிட்ட அவரை சரமாரியாக தாக்கியதுடன் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டான். இதனைத் தொடர்ந்து போலீசார் சிறுவனை கைது செய்து விசாரித்து வரும் நிலையில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
