உச்சகட்ட அதிர்ச்சி… DJ சத்தத்தால் 14 வயது சிறுமி உயிரிழப்பு…. உ.பி.யில் நடந்த நெஞ்சை பதை பதைக்க வைக்கும் சம்பவம்…!

By Nanthini on மார்கழி 15, 2025

Spread the love

தனது நண்பர்களுடன் ஆடி பாடி ஆனந்தமாக பொழுதை கழித்த திருமண ஊர்வலத்தில் பங்கேற்ற சிறுமி இன்று மண்ணுலகை விட்டு பிரிந்துள்ளார். அவர் உடம்பு முடியாமலோ அல்லது விபத்திலோ மரணிக்கவில்லை. ஆனந்தமாக டான்ஸ் ஆடி மகிழ வைக்கக்கூடிய DJ அவரைக் கொன்று விட்டது. உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ரஷி வால்மீகி (14) என்ற சிறுமி அதிக டிஜே சத்தத்தால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து உள்ளார். DJ இசையை கேட்டு பதற்றமாகி மூச்சு விட முடியாமல் திணறிய சிறுமி மாரடைப்பால் இறந்ததாக கூறப்படுகிறது

அதிக இரைச்சலை ஏற்படுத்தும் இந்த டிஜே சத்தம் ஒரு உயிரைப் பறித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாகவே பல நிகழ்ச்சிகளிலும் டிஜே வைக்கப்படும் நிலையில் அது தற்போது ஆபத்தில் முடிந்துள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.