ஜான்சி மாவட்டம் சீர்கான் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், இளைஞர் ஒருவர் டாக்ஸிக்காகச் சாலையோரம் காத்திருந்துள்ளார். அப்போது அங்கு வந்த மின்சார ரிக்ஷாவில் அவர் ஏறி அமர்ந்துள்ளார்.
அவர் அமர்ந்த சிறிது நேரத்திலேயே, பின்னால் அதிவேகமாக வந்த டிராக்டர் ஒன்று, எதிர்பாராதவிதமாக அந்த மின்சார ரிக்ஷா மீது பலமாக மோதி விபத்துக்குள்ளானது.
https://twitter.com/ashishpaswan0/status/2101648379810103548/video/1
இந்தக் கொடூர மோதலில் ஈ-ரிக்ஷா தலைகீழாகக் கவிழ்ந்து நொறுங்கியது. இதில் டாக்ஸிக்காகக் காத்திருந்து ரிக்ஷாவில் ஏறிய அந்த இளைஞரின் இரண்டு கால்களும் முறிந்தன.
