அடுத்த பரபரப்பு..! தவெகவில் இணைந்த பாஜக நிர்வாகி… செங்கோட்டையன் தான் அழைத்து சென்றாரா..?

By Soundarya on கார்த்திகை 27, 2025

Spread the love

இன்று செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் விஜய் முன்னிலையில் இணைந்துள்ளார். இந்நிலையில் செங்கோட்டையனை தொடர்ந்து சேலம் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏவும், பாஜக நிர்வாகியுமான வெங்கடாஜலம் தவெகவில் இணைந்துள்ளார். அதிமுகவில் எம்எல்ஏ, மாவட்ட செயலாளராக இருந்த இவர், 2023-ல் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

தற்போது அங்கிருந்து விலகி தவெக கட்சிக்கு தாவியுள்ளார். செங்கோட்டையன் கட்சியில் இணையும் நிகழ்ச்சியில்தான் இவரும் இணைந்தார். எனவே, இவரையும் செங்கோட்டையன் தான் தவெகவுக்கு அழைத்து சென்றாரா? என கேள்வி எழுந்துள்ளது