வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதன் காரணமாக பல மாவட்டங்களிலும் கன மழை பெய்து வருகிறது. ஆறுகள், ஏரிகள் போன்ற நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. இந்த நிலையில் தமிழ்நாட்டிற்கு 2 நாட்கள் ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நவம்பர் 29, 30 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ள் மாவட்டங்கள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி கன்னியாகுமரி தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கோவை, நாகை ஆகிய மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் என்று தெரிவித்துள்ளது.
