பாகிஸ்தான் படையினருக்கு எதிரான பதிலடித் தாக்குதலில், 58 பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. இந்த தாக்குதலில் 9 தாலிபான் வீரர்கள் மட்டுமே பலியானதாகவும், பாகிஸ்தான் படைகளின் ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளதாகவும் அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும் கத்தார் மற்றும் சவுதி அரேபியாவின் வேண்டுகோளை ஏற்று தற்போது தாக்குதல்களை நிறுத்திவிட்டதாகவும் தாலிபான் அரசானது கூறியுள்ளது.
