இந்தியாவில், பின் தங்கிய மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக மகளிர் சுய உதவிக் குழுவை, மத்திய மாநில அரசுகள் வழங்கி வருகின்றன. இது குறிப்பாக பெண்களுக்கு, சிறு தொழில்கள் தொடங்கவும், வருமானம் ஈட்டவும் உதவுகிறது. தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் லிமிடெட் – மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் இத்திட்டத்தை செயல்படுத்திவருகிறது.
இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு குழுவிற்கும் ரூ. 25 லட்சம் வழங்கப்படுகிறது. குழு உறுப்பினர் ஒருவருக்கு ரூ. 1.25 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் ஆண்டு வட்டி விகிதம், 6 % எனவும், திரும்ப செலுத்தும் காலம் 2 1/2 வருடங்களா நிர்ணயிக்கப்பட்டது. இத்திட்டத்தின் பங்கேற்க, ஒரு குழுவில் அதிகபட்சம் 20 நபர்கள் இருக்க வேண்டும், குழு துவங்கி 6 மாதங்கள் பூர்த்தியாகி இருக்க வேண்டும் என்னும் நிபந்தனைகளை இக்கழகம் விதித்துள்ளது.
தகுதிகள்:
- வயது: 18 முதல் 60 குள் இருக்க வேண்டும்
- ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே வழங்கப்படும்
- பிற்படுத்தப்பட்டோர் / மிகப்பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் – ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்
விண்ணப்பிக்கும் முறை :
- மாவட்ட / மத்திய / நகர கூட்டுறவு வங்கிகள் / கூட்டுறவு கடன் சங்கங்களில் விண்ணப்பிக்கலாம்
- மண்டல இணைப்பதிவாளர் அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம்
- டாப்செட்கோவின், www.tabcedco.tn.gov.in என்ற இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்கலாம்
- மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம்
தேவைப்படும் ஆவணங்கள் :
- ஆதார் அட்டை
- குடும்ப அட்டை
- ஓட்டுநர் உரிமம்
- வருமானம் சான்றிதழ்
- சாதி சான்றிதழ்
- பிறப்பிட சான்றிதழ்
