இன்று முதல் ஆகஸ்ட் 31 வரை… மெட்ரோ ரயில் பயணிகளுக்கு அதிரடி சலுகை… சூப்பர் அறிவிப்பு…!

By Srimathi on ஆவணி 7, 2025

Spread the love

சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்வதற்கு மெட்ரோ ரயில் பயன்படுத்தப்படுகிறது. மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து புறநகர் ரயில் நிலையம், பஸ் நிலையம் போன்றவற்ற இணைக்கும் இரு-வழித்தடங்கள் மூலம் தினந்தோறும் 3.25 லட்சம் பேர் பயணம் செய்கிறார்கள். பயணிகள் எளிதாக செல்வதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ள நிலையில், நாளுக்கு நாள் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இன்று முதல் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை, 50% சலுகையுடன் மெட்ரோ ரயில் டிக்கெட் “ஊபர் செயலி” மூலம் பெறலாம். மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு செல்லவும், திரும்பவும், பயண கட்டணத்தில் 50% சலுகை உண்டு. ஆட்டோ, கார், டூவீலர் முன்பதிவு செய்யும் ஊபர் செயலிலேயே  க்யூ.ஆர்.கோடை(QR Code)பயன்படுத்தி, ரயில் டிக்கெட்டையும் முன் பதிவு செய்யலாம்.
டெல்லிக்கு அடுத்து மெட்ரோ டிக்கெட்டுகளை, ஊபர் செயலி மூலம் முன்பதிவு செய்யும் வசதியை சென்னை மாநகரம் பெற்றிருக்கிறது.