அவரோட அடுத்த டைரக்ஷன்ல நான் தான்.. பிரபல இயக்குனரின் படத்தில் நடிக்க போட்டி போடும் தனுஷ் மற்றும் சிம்பு..!

By Nanthini on வைகாசி 13, 2025

Spread the love

சமீபத்தில் சசிகுமார் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் டூரிஸ்ட் ஃபேமிலி. இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனரான அபிஷன் ஜீவந்த் என்பவர் இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள நிலையில் ஒட்டுமொத்த கோலிவுட் வட்டாரமுமே இயக்குனரை பாராட்டி வருகிறது. சமீபத்தில் கூட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் அபிஷனை போனில் தொடர்பு கொண்டு பாராட்டினார். அதனைத் தவிர பிரபலங்கள் பலரும் இயக்குனரை தொடர்ந்து பாராட்டி வருகிறார்கள். குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் என்றாலும் அழுத்தமான கதைக்களத்தை கொண்டுள்ளதால் ஒட்டுமொத்த ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்களின் பாராட்டை பெற்று வருகிறது.

Tourist Family Review: டூரிஸ்ட் ஃபேமிலி விமர்சனம்.. மனிதம் என்றைக்குமே  'மரித்து போகாது'! | Tourist Family Review in Tamil: Sasikumar and Simran  plays both fun and emotional - Tamil Filmibeat

   

இப்படியான நிலையில் இந்த இயக்குனரின் படத்தில் அடுத்ததாக நடித்த பிரபல நடிகர்கள் இருவர் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் வேறு யாரும் இல்லை தனுஷ் மற்றும் சிம்பு தான். தென்னிந்திய சினிமாவிலயே பிசியான நடிகராக இருக்கும் தனுஷ் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என ஒரு ஆல் ரவுண்டராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

   

டூரிஸ்ட் ஃபேம்லி படத்துக்கு எனக்கே டிக்கெட் கிடைக்கல... இயக்குனர் என்ஜாய்  ஃபீலிங்! | director abishan jeevanth told about tourist family ticket and  enjoy feelings

 

தற்போது இட்லி கடை திரைப்படத்தை இயக்கி நடித்துக் கொண்டிருக்கும் தனுஷ் மறுப்பக்கம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் குபேரா பட வேலைகளிலும் பிசியாக உள்ளார். அது மட்டுமல்லாமல் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படம், இளையராஜா பயோ பிக், போர் தொழில் இயக்குனர் இயக்கத்தில் ஒரு படம் என அடுத்தடுத்து பிசியாக உள்ளார். அதனைப் போலவே சிம்புவும் தற்போது தக்லைப் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் அடுத்த படத்தில் நடிப்பதற்கான வேலைகளை தொடங்கியுள்ளார்.

dhanush -simbu:தனுஷ் - சிம்பு முதல் மீட்டிங் நடந்தது எப்போ ? என்ன  பேசிக்கிட்டாங்க ?

இப்படியான நிலையில் டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குனர் ஒரு சில வரிகளில் கதையை கூற இந்த கதை தனுஷ் மற்றும் சிம்பு இருவருக்குமே பிடித்து விட சீக்கிரம் இதற்கான முழு கதையை தயார் பண்ணுங்க நடிப்பதற்கு நாங்க தயாராக இருக்கோம் என்று இருவருமே போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அடுத்த படத்தில் இவர்களில் யார் இணைவார்கள் என்பது விரைவில் தெரியவரும்.