பாலிவுட் திரையுலகில் தனக்கென்று தனி ஒரு முத்திரையை பதித்தவர் தான் அனுராக் காஷ்யப். வித்தியாசமான கதை அம்சங்கள் மற்றும் எதார்த்தமான திரைக்கதைக்காக அறியப்படும் இவர் தற்போது நடிகராகவும் தென்னிந்திய திரை உலகில் தனது காலடியை பலமாக பதித்து வருகின்றார். இயக்குனர் என்ற அடையாளத்தை தாண்டி நடிகராகவும் அவர் பெறும் வரவேற்பு பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இவருடைய தென்னிந்திய சினிமா அறிமுகம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ஆர் அஜய் ஞானமுத்துவின் இயக்கத்தில் வெளியான அதிரடி திரைப்படமான இமைக்கா நொடிகள் திரைப்படம் மூலம் நிகழ்ந்தது. இந்த திரைப்படம் அவருக்கு தென்னிந்திய சினிமாவில் ஒரு புதிய பாதையை திறந்து விட்டது.

அதனைத் தொடர்ந்து பல தென்னிந்திய படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தாலும் அவர் அவற்றில் அதிக கவனம் செலுத்தவில்லை. அதேசமயம் இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் வெளியான மகாராஜா திரைப்படம் இவரின் நடிப்பு திறமையை வேறொரு தளத்திற்கு கொண்டு சென்றது என்று தான் சொல்ல வேண்டும். இந்த படத்தில் இவர் ஏற்று நடித்த நடித்திருந்த வில்லன் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அவருடைய மிரட்டலான நடிப்பும் கதாபாத்திரத்தின் ஆழமான தன்மையும் அனைவரையும் கவர்ந்தது.

தொடர்ந்து பிஸியாக சினிமாவில் பயணித்துக் கொண்டிருக்கும் இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் விஜய் சேதுபதி தனக்கு செய்த உதவியை மனம் திறந்து பேசி உள்ளார். அதில், இமைக்கா நொடிகள் படத்திற்கு பிறகு எனக்கு நிறைய தென்னிந்திய படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தது. ஆனால் அவற்றில் எல்லாம் நடிப்பதற்கு நான் ஆர்வம் காட்டவில்லை. கென்னடி படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளில் இருந்தபோது என் பக்கத்து வீட்டுக்காரர் மூலமாக விஜய் சேதுபதியை அடிக்கடி சந்தித்தேன். அப்போது அவர் ஒரு அற்புதமான கதையைப் பற்றி கூறினார்.

அந்தப் படத்தில் நடிக்க என்னை அவர் அழகிய நிலையில் முதலில் நான் மறுத்து விட்டேன். அதன் பிறகு நான் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தேன். அடுத்த வருடம் என் மகளுக்கு திருமணம் நடைபெற இருந்தது. அதற்கான செலவுகளை என்னால் சமாளிக்க முடியுமா என்று தெரியவில்லை என அவரிடம் தயக்கத்துடன் கூறினேன். அதற்கு விஜய் சேதுபதி நாங்கள் உங்களுக்கு உதவுகின்றோம் என்று உறுதி அளித்தார். அப்படி உருவானது தான் மகாராஜா திரைப்படம் என்று அனுராக் அந்த பேட்டியில் பேசியுள்ளார்.
