பிரபல பாடகியான சுசித்ரா அளித்த பேட்டி தான் இப்போது சோஷியல் மீடியாவில் ஹாட் டாபிக்காக உள்ளது. அவர் தனது முன்னாள் கணவர் கார்த்திக் குமார் பற்றியும், பயில்வான் ரங்கநாதன் பற்றியும் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவருக்கு பதில் அளிக்கும் விதமாக பயில்வான் ரங்கநாதன் போட்டி போட்டு பேட்டி கொடுத்தார். பாடகி சுசித்ரா தனது முன்னாள் கணவர் ஓரினச்சேர்க்கையாளர் எனவும், திருமணமான முதல் வருடத்தில் இருந்தே நான் விவாகரத்து கேட்டுக் கொண்டிருந்தேன் எனவும் கூறி அடுத்தடுத்த அதிர்ச்சி கொடுத்தார்.

மேலும் சுசி லீக்ஸ் என்பது ஒரு பிராங்க் நிகழ்ச்சி, அதில் தன்னை சிக்க வைத்து விட்டார்கள் என கூறினார். இந்த நிலையில் தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசிய சுசித்ரா மீது மான நஷ்ட ஈடு கேட்டு கார்த்திக் குமார் வழக்கு தொடர்ந்தார். சுசித்ரா தனக்கு ஒரு கோடியே ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவிட வேண்டும் என மனதாக்கல் செய்தார்.

மேலும் தன்னை பற்றியும் தனது குடும்பத்தினர் பற்றியும் சுசித்ரா அவதூறு கருத்துக்களை பரப்புவதால் அவருக்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் கார்த்திக் குமார் பற்றி பேசுவதற்கு சுசித்ராவுக்கு இடைக்கால தடை விதித்தது. மேலும் நீதிபதி ஜூலை ஒன்றாம் தேதிக்கு வழக்கை நீதிபதி ஓத்தி வைத்தார்.
View this post on Instagram
