பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் கடந்த 14-ஆம் தேதி 77-வது கேன்ஸ் திரைப்பட விழா தொடங்கியது. சுமார் 10 நாட்கள் இந்த விழா விமர்சையாக நடைபெற்றது. நிறைவு நாளான இன்று திரைப்பட விழாவின் பல்வேறு பிரிவுகளில் திரையிடப்படும் படங்கள் பற்றி கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டது.
பல்வேறு பகுதிகளில் உருவாக்கப்பட்ட படங்கள் திரையிடப்பட்டது. இந்த நிலையில் சிறந்த நடிகைகான விருது இந்திய நடிகையான அனுசியா சென்குப்தாவுக்கு வழங்கப்பட்டது. இதன் மூலம் கேன்ஸ் திரைப்பட விழாவில் விருது வென்ற முதல் இந்திய நடிகை என்ற பெருமையை பெற்றுள்ளார். அனுசுயா அனுசுயா சென்குப்தா கொல்கத்தாவை சேர்ந்தவர்.
தி ஷேம்லெஸ் திரைப்படத்திற்காக அன் செர்ட்டன் ரெக்கார்ட் விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. பல்கேரிய திரைப்பட தயாரிப்பாளரான கான்ஸ்ட்டாண்டின் போஜனோ ஷேம்லெஸ் படத்தை எழுதி இயக்கியுள்ளார். விருது வென்ற அனுசியா அளித்த பேட்டியில் கூறியதாவது, எங்கள் படத்தின் பெயர் அறிவிக்கப்பட்ட போது நான் பரவசத்துடன் நாற்காலியில் இருந்து குதித்தேன் என கூறியிருந்தார்.
காவல் அதிகாரியை கொன்று விட்டு டெல்லி பாலியல் தொழில் செய்யும் இடத்தில் ரேணுகா சிக்கி கொள்கிறார். அங்கு தேவிகா என்ற பெண்ணால் அவர் ஈர்கப்பட்டு அதன் பிறகு இருவரும் சேர்ந்து சந்திக்கும் சவால்கள் பற்றி படம் கூறுகிறது. இந்த படத்தில் அனுசுயாவின் நடிப்பு பாராட்டுகளை பெற்றது. இந்த விருது மூலம் அனுசுயா இந்திய சினிமா உலகிற்கு புகழை சேர்த்துள்ளார்.