Connect with us

CINEMA

ஷூட்டிங் ஸ்பாட்டே மிரண்டுபோச்சு.. அவுங்கள பாத்து பிரமிச்சிட்டான் நானு.. குஷ்புவை வியக்கவைத்த நடிகை..

நடிகை குஷ்பூ நடிகை சில்க் ஸ்மிதாவை பற்றி அளித்த பேட்டியானது இணையத்தில் வெளியாகியுள்ளது. தென்னிந்திய திரை உலகின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் ‘சில்க் ஸ்மிதா’ இவர் இயக்குனர் வினு சக்கரவர்த்தி இயக்கிய’ வண்டிச்சக்கரம்’ எனும் திரைப்படத்தில் ‘சிலுக்கு’ என்கிற சாராயக்கடையில் பணிபுரியும் பெண்  கதாபாத்திரத்தில் அறிமுகமானார். இத்திரைப்படத்திற்கு பிறகு தான் ‘சில்க் ஸ்மிதா’ என்று அழைக்கப்பட்டார். தனது கவர்ச்சியான தோற்றத்தாலும், நடனத்தாலும் அனைவரையும் ஈர்த்தார்.

actress Silk Smitha

   

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு,மலையாளம் கன்னடம் போன்ற பிற மொழி படங்களில் நடித்து திரைப்பட உலகின் கனவு கன்னியாக வலம் வந்தார்.  மூன்று முகம் , சகலகலா வல்லவன் ,அலைகள் ஓய்வதில்லை, நீங்கள் கேட்டவை, தாலாட்டு கேட்குமா, மூன்றாம் பிறை போன்றவை இவர் நடிப்பில் வெளியான சில ஹிட் படங்கள். குறுகிய காலத்துக்குள் அதிக படங்களில் நடித்த இவர் தனது  35 வது வயதில் தூக்கு போட்டு தன்னுடைய வீட்டிலேயே இறந்தார்.

Actress Silk Smitha

காதல் தோல்வி இவர் இறப்பிற்கு காரணமாக சொல்லப்படுகிறது. சில்க் ஸ்மிதாவின் நடன திறமையும் கண்களின் வசீகரமும் திரைப்பட உலகில் ஒரு அழியாத சுவட்டை விட்டு சென்றுள்ளது என்பதை யாராலும் மறக்க முடியாது.  இப்படி திரையுலகில் ஒரு கலக்கு கலக்கிய இவரின் மரணம் தற்பொழுது வரை அவருடைய ரசிகர்களின் மனதில் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் சில்க் ஸ்மிதா குறித்து நடிகை குஷ்பூ அளித்த பேட்டி தற்பொழுது இணையத்தில் வெளியாகி படுவைரலாகி வருகிறது.

அந்தப் பேட்டியில் நடிகை குஷ்பூ கூறியதாவது,  ‘நான் சினிமா துறையில் பார்த்து பிரமித்த ஒரே நடிகை என்றால் அது சில்க் ஸ்மிதாதான். அவர் உண்மையில் ரொம்பவே நல்ல குணம் படைத்தவர். 80களில் நானும், அர்ஜுனும் ஒரு படம் செய்தோம். ஆனால் அந்தப் படம் முடிவடையவில்லை. அதில் சில்க்குக்கு முக்கியமான ரோல். அந்தப் படத்தின் ஷூட்டிங்கின்போது சில்க் வரும்போது அந்த ஸ்பாட்டே பரபரக்கும். யாரை பார்த்தாலும் மேடம் வராங்க, மேடம் வராங்க என்று பரபரத்துப்போவார்கள். ஒருநாள் அப்படி முதன்முறையாக சில்க்கை பார்த்தேன். அப்போது நான் எனது வாயை பிளந்துவிட்டேன்.’ என்று கூறியுள்ளார். இதோ அந்த பேட்டி…

 

Continue Reading

More in CINEMA

To Top