Connect with us

CINEMA

CWC தர்ஷனுக்கு இந்த பிரபல நடிகையுடன் திருமணமா…? இணையத்தில் வெளியான புகைப்படத்தின் பின்னணி என்ன..?

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் ஹிட்டான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமானவர் தான் தர்ஷன் . இந்நிகழ்ச்சியின் 3 வது சீசனில்,  இவர் 2 வது இடத்தை பிடித்தார்.  இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ரஜினி முருகன் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து, அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்த கனா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

#image_title

   

மேலும் ‘தும்பா’ என்ற திரைப்படத்தில் நாயகனாக தோன்றி இருந்த தர்ஷன்,  இதற்கடுத்து, எச். வினோத் இயக்கத்தில் அஜித் குமார், மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருந்த துணிவு திரைப்படத்திலும் கதையின் முக்கிய கதாபாத்திரத்தில் தர்ஷன் நடித்து பாராட்டுக்களை பெற்றிருந்தார். இதைத்தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் CWC தர்ஷன், நடிகை அஞ்சு குரியனை திருமணம் செய்துகொண்டது போல திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி படுவைரலாகி வருகிறது. மலையாள நடிகை அஞ்சு குரியன், தமிழில், இஃக்லு, சில நேரங்களில் சில மனிதர்கள், சிங்கிள் ஷங்கரும் ,ஸ்மார்ட்போன் சிம்ரனும் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இதுதவிர மலையாளத்தில் பிசியான நடிகையாக வலம் வந்து கொண்டுள்ளார்.

தற்பொழுது தர்ஷன் மற்றும் அஞ்சு குரியன் இருவரும் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்கள் அதிகம் பகிரப்பட்டு, அவர்கள் இருவரும் ரகசிய திருமணம் செய்துகொண்டதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

ஆனால் உண்மை என்னவென்றால், அது லலிதா ஜுவல்லரி விளம்பரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படமாம். அந்த விளம்பரத்தில் இருவரும் ஜோடியாக நடிக்க, இதனை நெட்டிசன்கள் தவறாக புரிந்து கொண்டு, தற்பொழுது வைரலாக்கி வருகின்றனர்.

Continue Reading

More in CINEMA

To Top